SHARE

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரர் சற்றுமுன்னர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பலத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அந்தவகையில் குறித்த மூவரையும் பதவி விலக்குமாறு கோரிக்கை விடுத்து கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் இன்று ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டிருந்தார்.

இந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email