SHARE

மட்டக்களப்பு தலைமையக தபாற் கந்தோர் தபாற் பெட்டியில் 37 தேசிய அடையாள அட்டைகளை தபாற்கந்தோர் தபால் அதிபர்  வெள்ளிக்கிழமை (07) பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த தபாற் கந்தோரில் உள்ள தபாற் பெட்டியை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல திறந்து கடிதங்களை எடுக்கும்போது அதில் பல தேசிய அடையாள அட்டைகள் இருப்பதை அவதானித்த ஊழியர் தபால் அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து அதில் 37 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன

இதனையடுத்து குறித்த தேசிய அடையாள அட்டைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தபால் அதிபர் ஒப்படைத்தார்.

இதில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந் 13. வவுணதீவு 6, களுவாஞ்சிக்குடி 2 , கேகாலை 1, நாவலப்பிட்டி 1, காத்தான்குடி 8, கொக்கட்டிச்சோலை 1, களுத்துறை 1, மொனராகலை 1, திருகோணமலை 1, ஏறாவூர் 1 . ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

பல பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய அடையாள அட்டைகளை ஒரே தடவையில் தபாற் பெட்டியில் போடப்பட்டுள்ளது. நசகரரச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Print Friendly, PDF & Email