SHARE

ஈழ சினிமா அரங்கில் பெரும் வரவேற்பபை பெற்றதுடன் பல விருதுகளையும் வென்று குவித்த ஈழத்து முதல் முழு நீளப்படமான சினம் கொள் பிரித்தானியாவில் எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.

லண்டன் EAST HAM, 7-11 BARKING RD எனும் முகவரியில் அமைந்துள்ள BOLEYN சினிமாவில் மாலை 7.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

துரோகம் என்ற வெற்றிக் குறும்படத்தின் மூலம் ஈழ சினிமாவில் தனக்கானதொரு முத்திரையை பதித்த ரஞ்சித் யோசப் பின் இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிக் படமே சினம்கொள்.

மாபெரும் தமிழ் இனப்படுகொலைக்கு பின்னரான ஈழத்தமிழரின் போராட்டம் மற்றும் வாழ்வியலை பேசும் இத்திரைப்படம் திட்டமிடப்பட்ட நுனுக்கமான இன அழிப்பு, தாய் நிலத்திற்கான இடையுறாத கேள்விகள் முதலியவற்றையும் சித்தரித்து வெளிவந்துள்ளது.

மேலும் வடக்கில் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை கலாச்சாரத்துக்கு எதிரான மற்றும் தமிழின பண்பாட்டு சிதைப்புக்கு எதிரான நாயகனின் சினமாக இக்குறும்படம் பேசுகின்றது.

இந்நிலையில், கனவுகளும் வடுக்களும் நிறைந்த முகமங்களும் அனல் கலந்த ஈழமுமாய் உலகின் மனட்சாட்சியை தட்டி எழுப்பு அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இப் படம் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் சனிக்கிழமை பிரித்தானியாவில் திரையிடப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email