SHARE

ஈழ பின்னணியில் உருவாகி “யு” சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படமான ‘சினம் கொள்‘ எதிர்வரும் சனிக்கிழமை லண்டனில் திரையிடப்படவுள்ளது.

ஈழ சினிமா அரங்கில் பெரும் வரவேற்பபை பெற்றதுடன் பல விருதுகளையும் வென்று குவித்த ஈழத்து முதல் முழு நீளப்படமான இப்படம் லண்டன் EAST HAM, 7-11 BARKING RD எனும் முகவரியில் அமைந்துள்ள BOLEYN சினிமாவில் மாலை 7.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன் அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள்.

அதன் பின்னணியில் நடப்பதை மையப்படுத்தி நகரரும் இப்படத்தில் நாம் எதற்காக சினம் கொண்டோம் தற்போது எதற்காக சினம் கொள்ளவேண்டும் என்ற தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email