SHARE

கறுப்பு யூலை (1983) தமிழினப்படுகொலை நினைவு நாளினை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிராக லண்டனில் இன்று மாபெரும் ஆரப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்னால் இன்று முற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசு 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலையை கறுப்பு யூலைக் குற்றத்தை அனைத்துலக சமூகம் கடுமையாக கண்டித்து அதற்காக ஈடுசெய்நீதியினை பெற்றுதந்திருந்தால் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்றிருக்காது.

எனவே சர்வதேசமே தமிழப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை தண்டித்து எமக்கான நீதியினைபெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை இன்றைய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்திருந்தனர்.

Print Friendly, PDF & Email