SHARE

மக்களின் முடிவை அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படலாம் என சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

தேர்தல் தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இல்லாததால் மாகாண சபைத் தேர்தல் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் மாகாண சபை தேர்தலை முதலில் நடுத்துவதனால் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியும் என்ற ஆலோசனையை ஜனாதிபதி தனக்கு நெருங்கியவர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சட்டமா அதிபருடன் இந்த விடயம் தொடர்பாக விரைவில் ஆலோசித்த பின்னர் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவார் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

Print Friendly, PDF & Email