SHARE

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொனுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் போருக்குப் பின்னரான தற்போதைய வடக்கு மாகாண மக்களின் நிலைமை தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் Canadian integrated conflict Analysis Process சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களான Ms.Sharmala Naidoo மற்றும் Mr.Vikramveer Suagh ஆகியோர் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email