SHARE

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை  சென்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, அவரிடம் நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர், படையினர் பல ஏக்கர் காணிகளை விடுவிக்கவில்லை எனவும் அவற்றை விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை காணி விடுவிப்பை வலியுறுத்தி, வடக்கு கிழக்கின் பல இடங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email