SHARE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தினை கடந்துள்ள போதிலும் காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசு இதுவரை எவ்வித தீர்வினையும் வழங்கியிராத நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையில் பிரித்தானியா அரசு இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவேண்டுமெனவும் சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கவேண்டுமெனவும் குறித்த மாநாட்டில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி மாநாடானது பிரித்தானி பாராளுமன்றின் இலக்கம் 10 ஆம் அறையில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிவரை நடைபெற்றது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email