SHARE

இலங்கை அரசினால் உருவாக்கப்பட்டு யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகங்களை முடக்கும் வகையிலான மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணத்தில், கூடி ஆராய்ந்துள்ளனர். இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில், நேற்று (10) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதேபோன்று தாமும் யாழ்ப்பாணத்திலும் தொடர் போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கமைய, இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 14ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தாமே எனத் தெரிவித்த அவர்கள், அதனால் தமக்காக தாமே போராடி வருவதாகவும் கூறினார்.அஅதனடிப்படையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், அவர்கள் மேலும் கூறினர்.

Print Friendly, PDF & Email