SHARE

ITJP யினால் ஐ.நா. வில் நாளை வெளிடப்படவுள்ள அறிக்கையில் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டவர்கள் என தற்போதைய வட மத்திய மற்றும் வடமேல் மகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உட்பட கட்டளை நிலையிலுள்ள 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) ஐ.நா. வில் நாளை (புதன்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பொலிசின் பயங்கரவாத விசாரணை பிரிவு பற்றிய புதிய ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட ITJP, பாதிக்கப்பட்ட 73 நபர்களிடம் மேற்கொண்ட ஆய்விலேயே பெயர்குறிப்பிடப்பட்ட கட்டளை நிலையில் உள்ள அதிகாரிகள் 58 பேர் சித்திரவதையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பொலிசாரின் சித்திரவதைகள் பற்றிய தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றமை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது அத்துடன் இது பாதுகாப்பு பிரிவின் மறுசீரமைப்பு பற்றி இலங்கையினால் கூறப்பட்ட வாக்குறுதியினையும் , நிலைமாற்று நீதியையும் கேலிக்கூத்தாக்குகின்றது என ITJP யின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் சித்திரவதைகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டவர்கள் என தெரிந்தும் தற்போதைய அரசாங்கம் உட்பட அடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பொலிசாருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வு வழங்கியுள்ளனர் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐவுதுP இனுடைய இந்த புதிய அறிக்கையானது கொழும்பிலுள்ள வுஐனு அலுவலகம் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு முகாம் என்பவற்றில் வுஐனு இனரால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட மிருகத்தனமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவற்றின் விபரங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தலைமையில் நாளை ஐ.நா. வில் நடைபெற்றவுள்ள மேற்படி விசேட நிகழ்வில் மேற்படி அறிக்கை வெளிடப்படவுள்ளதுடன் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா அவ்வமைப்பின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஹரீசன் மற்றும் புலனாய்வாரள் வான்டர் ஸ்டாடென் பொந்தோஸ் ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITJP இன் புதிய அறிக்கை பின்வறுமாறு

http://www.itjpsl.com/assets/press/ITJP_TID_report_final-_SINGLES.pdf

Print Friendly, PDF & Email