SHARE

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமையை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் முல்லைத்தீவில் இன்று மாபெரும் கண்டன ஆரப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

நேற்றைய தினம் குறித்த ஆலயப்பகுதியில் தேரரின் உடல் அடக்கம்செய்ய முற்பட்டவேளையில் அதனை தடுக்க சென்றிருந்த தமிழ் மக்கள் மீதும் நீதிமன்ற உத்தரவை மீறுகிறீர்கள் என எடுத்துரைக்கெ சென்ற சட்டத்தரணிகள் மீதும் பௌத்த பிக்குகள் பொலிஸார் முன்னிலையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளின் குறித்த அடவடியான செயலிற்கு எதிராக முல்லைத்தீவில் இன்று பெருமளவில் திரண்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றின் கட்டளையை அவமதித்தவர்கள் அதற்குத் துணைநின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி மேற்படி கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த சம்பவத்தினை கண்டித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email