SHARE

போரால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் அன்றாட தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் தாய்நிலம் அறக்கட்டளையின் கோரிக்கையின் அடிப்படையில் லண்டனில் உள்ள மனித உரிமைசெயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரான  எம்.அனீஸால் அவர்களால் கடந்த வாரம் சாவகச்சேரியில் உள்ள தாய்நிலம் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மூவருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது. 

போரில் பெற்றோரை இழந்த விநாயகபுரம் இயக்கச்சியைச்சேர்ந்த மாணவன் ஒருவருக்கும், கிராஞ்சி சிவபுரம் பிருந்தாவன வீதி பகுதியில் வசிக்கும் பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த மணவன் ஒருவனுக்கும், நீர்வேலி அச்சலூர் வேணிபுரத்தை சோந்த கணவர் காணாமல் ஆக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கும் குறித்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதியும், கிளிநொச்சி மாவட்ட கட்டளைப் பணியக துணைக் கட்டளைத் தளபதியுமான லெப்.கேணல் ஈழப்பிரியன் நினைவாகவே இந்த உதவிகளை மனித உரிமை செயற்பாட்டாளரான கீத் குலசேகரம் அவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email