SHARE

கொழும்பில் இயங்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு 7 இல் இயங்கும் தனியார் ஹோட்டல் ஒன்று தன்னுடைய ஊழியர்களை தமிழில் பேச வேண்டாம் என்று தடை செய்திருக்கிறது. இது தொடர்பில் அந்த ஹோட்டலில் ஒரு அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ‘அனைத்து ஊழியர்களும் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மாத்திரமே பே வேண்டும். கண்டிப்பாக தமிழில் பேச்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு பலகை தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று அதிகளவில் பகிரப்பட்டு வருவதுடன் குறித்த ஹோட்டலின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த புகைப்படத்தினை தொடர்ந்து வலைத்தள பாவனையாளர்கள் மேற்படி ஹோட்டலுக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பி வருவதுடன் அந்த ஹோட்டலின் வலைத்தளத்திற்கு எதிராகவும் முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email