Home சிறப்புச் செய்திகள் ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

87 views
0
SHARE

ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு
ICPPG புகார் மனு

ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிக்காக இலங்கையின் இராணுவ வீரர்களை மாலிக்கு அனுப்புவதை உடனடியாக தடுக்குமாறு இனப்படுகொலையை தடுப்பது மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) ஐ.நா.விற்கு புகார் மனு ஒன்றினை அனுப்பியுள்ளது.

243 இராணுவ வீர்ரகளை கொண்ட குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை (நவம்பர் 12 ஆம் திகதி) ஐ.நா. அமைதிகாக்கு பணிக்காக மாலிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ICPPG ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்காக பொது செயலாளர் Jean Pierre Lacriox மற்றும் ஐ.நா. மனித உரிமைகளுக்காக உயர்ஸ்தானிகர் Michelle Bachelet Jeria ஆகியோருக்கு மேற்படி புகார் மனுவினை அனுப்பிவைத்துள்ளது.

அதில் ஐ.நா. அமைதிகாக்கு பணியில்; இலங்கையின் 243 இராணுவ வீர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ICPPG போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் அவரின் பணிப்பின் கீழ் அனுப்பப்படும் இராணுவ வீரர்களை ஐ.நா. பணியில் இணைத்துக்கொள்வது எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை போர்க்குற்றவாளியான ஷவேந்திர சில்வா இராணுவத்தளபதியானதும் இலங்கையிலிருந்து ஐ.நா. பணிக்காக வீரர்கள் அனுப்பப்படுவது தடைசெய்யப்பட்டது. ஆனால் 3 மாதங்களின் பின்னர் தற்போது அனுப்பப்படவுள்ள இராணுவ வீரர்கள் அதே போர்க்குற்றவாளிக்கு வணக்கம் செலுத்துவதை காண்கின்றோம். இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்குமாறும் குறித்த மனுவில் ICPPG கேள்வி எழுப்பியுள்ளது.

லண்டனை தளமாக கொண்டியங்கும் ICPPG இது குறித்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

Print Friendly