SHARE

இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் – ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு
ICPPG புகார் மனு

யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம், ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென இனப்படுகொலையை தடுப்பது மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) அறை கூவல் விடுத்துள்ளது.

243 இராணுவ வீரர்களை கொண்ட குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை (நவம்பர் 12 ஆம் திகதி) ஐ.நா. அமைதிகாக்கு பணிக்காக மாலி புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா.விற்கு புகார் மனு ஒன்றினை அனுப்பியுள்ள ICPPG மேற்படி தமிழ் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

243 இராணுவ வீரர்களை கொண்ட குழு மாலிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அதிர்ப்தி வெளியிட்டுள்ள ICPPG, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கான பொது செயலாளர் Jean Pierre Lacriox மற்றும் ஐ.நா. மனித உரிமைகளுக்காக உயர்ஸ்தானிகர் Michelle Bachelet Jeria ஆகியோருக்கு மேற்படி புகார் மனுவினை அனுப்பிவைத்துள்ளது.

அதில் ஐ.நா. அமைதிகாக்கு பணியில் இலங்கையின் 243 இராணுவ வீர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ICPPG, போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் அவரின் பணிப்பின் கீழ் அனுப்பப்படும் இராணுவ வீரர்களை ஐ.நா. பணியில் இணைத்துக்கொள்வது எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, போர்க்குற்றவாளியான ஷவேந்திர சில்வா இராணுவத்தளபதியானதும் இலங்கையிலிருந்து ஐ.நா. பணிக்காக வீரர்கள் அனுப்பப்படுவது தடைசெய்யப்பட்டது. ஆனால் 3 மாதங்களின் பின்னர் தற்போது அனுப்பப்படவுள்ள இராணுவ வீரர்கள், அதே போர்க்குற்றவாளிக்கு வணக்கம் செலுத்துவதை காண்கின்றோம். இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்குமாறும் குறித்த மனுவில் ICPPG கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையிலேயே, யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. வின் அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து விரைந்து செயற்படுமாறு ICPPG அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை குறித்த முறைப்பாடு தொடர்பிலான வரைபினையும் தமிழ் அமைப்புகளிற்கு அனுப்பி வைத்துள்ளது.

ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடும் இராணுவ வீர்களுக்கு இராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்படும். இதனால் அவர்களை எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தமுடியாது. இந்நிலையிலேயே, யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை இப்பணியில் அமர்த்தி அவர்களை யுத்தக்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க வைக்க இலங்கை அரசும் இராணுவத்தலைமைகளும் தந்திரமாக செயல்படுகின்றன.

இந்நிலையிலேயே, மாலி செல்லவுள்ள இலங்கை இராணு வீரர்களை தடுக்க ஐ.நா.விற்கு அழுத்தம் கொடுக்குமாறு ICPPG அழைப்பு விடுத்துள்ளது.

லண்டனை தளமாக கொண்டியங்கும் ICPPG இது குறித்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு ,

Print Friendly, PDF & Email