SHARE

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம்.

இவர்கள் புலம்பெயர்ந்த  புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர்.  நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக செயற்படும் போது, வெளிவிவகார அமைச்சிலுள்ள இந்த அதிகாரிகள், சகவாழ்வைச் சீரழிப்பதாக எம்மைக் காட்டிக் கொடுத்தனர்.

மேலும் நாங்கள், ஜெனீவா சென்று நாட்டுக்காக குரல் கொடுத்தபோது எம்மைப் பற்றி வெளிவிவகார அமைச்சிலுள்ள சிலர் தகவல் திரட்டினர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email