SHARE

பிரித்தானியாவின் ஆளும் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிரடி!

பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்) தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பில் இரு தேச கோட்பாட்டை வலியுறுத்தியதுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உலகெங்கிலும் நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதிக்கான முன்னாள் மற்றும் தற்போதைய மோதல் மண்டலங்களில் சர்வதேச முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை வலியுறுத்தியதுள்ளது.

இந்நிலையிலேயே பிரிந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இலங்கைக்கும் இரு தேச கோட்பாட்டை வலியுறுத்தியதுள்ளது.

மேலும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க ஒரு சர்வதேச பொறிமுறையை உருவாக்குவதற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேவேளை இலங்கையை இரு தேச கோட்பாடு கொண்ட சைப்பிரஸ், ஸ்ரேல் மற்றும் பலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

பழமைவாதக் கட்சிக்கான பிரித்தானிய தமிழர்கள் ( BTC) ஊடகத் தொடர்பாளர் இது பற்றி பேசுகையில்,

“இலங்கையை பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடையத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு நீதி வழங்காது பின்னடித்தாலோ அல்லது தமிழர் அபிலாசைகளுக்கு ஏற்ற தீர்வு ஒன்றை வழங்க மறுத்தாலோ, சர்வதேசம் இரு தேச கோட்பாட்டை நோக்கி நகர்வதை தடுக்க முடியாதது” என்று குறிப்பிட்டார்.

இதேபோல் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சியும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்த ஐ.நா மற்றும் காமன்வெல்த் மூலம் நாங்கள் செயல்படுவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email