SHARE

மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம்


இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை பிரித்தானிய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளமை தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரசியல் அடிப்படையிலான வெற்றியாகவே தாம் கருதுவதாக மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெர் தமிழர்களை கழுத்து அறுப்பது போன்ற சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்த முறைப்பாட்டாளர்களான மயூரன் சதானந்தன், வினோத், கோகுலன் மற்றும் சாட்சிகளான சபேஸ்ராஜ், சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோருடன் ICPPG யினால்
பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் தொடரப்பட்டு சுமார் 21 மாதங்களாக நடைபெற்ற வழக்கின் இறுத்தீரப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

அதில் பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி தீர்ப்பினையடுத்து குறித்த வழக்கில் பிரதானமாக செயலாற்றியவரான மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Print Friendly, PDF & Email