SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த போராட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதுடன், செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மகஜரொன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்க்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி மரியசுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email