SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2019 நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.

மனிதனின் உரிமைகளை பேணிக்காக்க ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் பிரகடணப்படுத்திய (டிசம்பர் 10) மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும்; சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டு தோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர் வரும் சனிக்கிழமை (14) TRINITY HALL, EASTHAM, E12 6SG எனும் இடத்தில் வுஐஊ யின் 2019 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இந் நிகழ்வில் உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து மனித உரிமைகள் தொடர்பிலான கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிரவுள்ள அதேவேளை மனித உரிமைகளை தழுவிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

தாயகத்தில் தற்போதும் தமிழ் மக்களுக்கு எதிராக தற்போதும் இடம்பெற்று வரும் அநீதிகள் அடிப்படை உரிமை மீறல்களை சர்வதேசத்தின் முன்னிலையில் வெளிக்கொணர சிறந்த தளமாக அமையவுள்ள இந்நிகழ்வில் புலம்பெயர் தேசத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email