SHARE

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 1955 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இது தொடர்பாக முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து முறைபாடுகளை பதிவு செய்வதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, பயணிகள் தமது முறைபாடுகளை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் முறைபாடுகளுக்கு அமைய பேரந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, தனியார் பேருந்துகள் அல்லது இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மந்த கதியில் பயணிக்குமாயின் அது தொடர்பாக பயணிகள் முறைபாடுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பேருந்து சாரதிகள் கவனயீனமாக அல்லது சட்டவிரோதமாக பயணிப்பாராயின், அல்லது பேரந்து நடத்துனர்கள் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் செயற்படும் பட்சத்தில் அது குறித்தும் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறையிட முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து பேருந்துகளிலும் ஒலிப்பரப்புவதற்கு ஏற்ற வகையில் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email