SHARE

ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் உலகெங்கும் 20 நாடுகளில் 50 மேற்பட்ட திரையரங்குகளில் நாளை 03 ஆம் திகதி முதல் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் லண்டனில் நாளை வெள்ளிக்கிழமை (3) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை 5 திரையரங்குகளில் குறித்த படம் திரையிடப்படவுள்ளது.

அந்தவகையில் Ilford Feltham, Wembley, South ruislip மற்றும் Wandsworth ஆகிய இடங்களிலுள்ள சினிவேல்ட் திரையரங்குகளில் நாளை முதல் திரையிடப்படவுள்ளது.

பல வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு யுத்தம் முடிந்த பின் தனது ஊருக்கு வரும் ஒரு முன்னாள் விடுதலைப்புலி போராளியின் கதை. ரயிலில் வந்து கிளிநொச்சியில் இறங்கும் அந்த போராளியின் பெயர் அமுதன். அந்த போராளி யுத்தத்தின் பின் கிளிநொச்சியில் வந்து அவனது சொந்த ஊரை பார்ப்பதற்கு பதற்றத்துடன் வருகிறான் ஆனால் அது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவனது குடும்பத்தை பார்க்க யாழ்ப்பாணம் போகின்றான். அங்கு அவன் அவனது குடும்பத்தை சந்தித்தானா? எப்படியான பிரச்சனைகளை அவன் அங்கு சந்திக்கிறான்? தற்போது உள்ள ஈழம் எப்படியானது? தற்போது புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் மக்கள் எப்படி ஒரு போராளியிடம் அங்கு நடந்து கொள்கிறார்கள்? இறுதியில் ஒரு போராளியாக இருந்ததால் எப்படியான சிக்கல்களை அவன் எதிர் கொள்கிறான்? என்ற பல அம்சங்களை சுமந்து வருகின்றது இம்முழுநீளத்திரைப்படம்

Print Friendly, PDF & Email