SHARE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம்தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில், காணாமற்போனோர் விடயத்தில் உலக நாடுகள் தலையிட்டு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுவரை இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email