SHARE

பதில் நீதிபதி மனோன்மணி சதாசிவம் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர்

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இலங்கை அரசிற்கு சாதகமானதாக பக்கச்சார்ப்பாக அமைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சார்ப்பில் குரலெழுப்ப தவறியுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா.வின் அறிக்கை தொடர்பில் வடக்கு- கிழக் கில் வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோர் சங்கத்தாலும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் சார்பிலும் ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கையொப்பங்களுடன் பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் ஊடாக ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜர் பின்வருமாறு,

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இலங்கை அரசாங்கத் திற்கு சாதகமானதாக, பக்கச்சார் பானதாக அத்தோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரலெழுப்ப தவ றியுள்ளது. முக்கியமாக ஒட்டு மொத்த மனிதவுரிமை மீறல்கள் அதனால் பாதிக்கப்பட்ட மக்க ளின் தமிழ் அடையாளத்தை அழித்து உள்ளது. ஒ.ஐ. எஸ்.எல் அறிக்கை மற்றும் ஐ.நா. நிபுணர்கள் அறிக்கை இன அடிப் படையில் வன்னியில் உள்ள தமிழர்கள் அநீதியை எதிர் கொண்டு வருகின்றனர் என தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் உங்களுடைய அறி க்கை படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் தொடர்பிலும் தேசிய கீதம் தொடர்பிலும் மாத்திரம் தமிழ் மக்களைத் தொடர்புபடுத்தி குறிப்பிடுகின்றது.
மாறாக நீதிக்காக போராடும் ஒரு சமூகமாக குறிப்பிடப்பட வில்லை. இவ்வறிக்கையானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் தொடர்பான விவகாரத் தில் இலங்கை அரசு வித்தியாச மான அணுகுமுறை ஒன்றை கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றது.

இது மிகவும் வெட்கக் கேடான சொற்பிரயோகம் ஆகும். தற்போதைய அரசாங்கமும் இதற்கு முன்னைய அரசாங்க மும் தமது சிறைகளில் இருந்த எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை என முற்றாக நிராகரித்ததை ஏன் நீங்கள் கூற வில்லை? படையினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்த சாட்சிக ளாக நாம் இருக்கிறோம்.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் முக்கி யமான பூர்வாங்க நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள் பாதிக் கப்பட்டவர்கள் சமுதாயம் என்ற வகையில் அவ்வாறான பூர்வா ங்க நடவடிக்கைகள் எவையென நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

லெப்டினன் ஜெனரல் சவேந் திர சில்வா அல்லது ஜெனரல் ஜெகத் ஜயசூரிய ஆகியோரிடம எம் குடும்ப அங்கத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர் பில் விசாரணை செய்துள்ளீர் களா? இவர்கள் முன்னிலை யிலே 18.05.2009 அவர்கள் சரணடைந்தார்கள். அத்தகைய பூர்வாங்க நடவடிக்கைகளின் விளைவாக ஒரு தனிப்படட நபர் கூட உண்மை நிலைமையை அண் மிக்க முடியவில்லை. நீங்கள் certificates of absence கோடிட்டு காட்டுகிறீர்கள்.

ஆனால் பாரி யளவில் நிகழ்ந்தேறிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவியல் பொறுப்புக் கூறலுக்கான தேவையை நீங் கள் வலியுறுத்தவில்லை.

மேலும் இழப்பீட்டு தொகையை பொறுத்தவரையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 250 குடும்பங்க ளும் நட்ட ஈடாக 265 மில்லியன் ரூபாய் பெற இருக்கிறர்கள்.அதே நேரம் யுத்தத்தில் எல்லாவற்றை யும் இழந்த பத்தாயிரக் கணக் கான எங்களுக்கு 500 மில்லி யன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. இவை உங்களுக்கு எதை புலப்படுத்துகிறது.

ஓ.எம்.பி.மற்றும் திருத்தத் துக்கான அலுவலகங்களில் (reparations) படை அதிகாரி களை மாத்திரம் உள்ளடக்கியுள் ளார்கள்.அதில் ஏன் முன்னாள் போராளிகள் உள்ளீர்க்கப்பட வில்லை.

நீங்கள் சரியாக பாதிக்கப் பட்டவர்களை அடையாளம் காண எத்தனிக்கவில்லை என் பது பெரியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவமதிக்கும் விதமாக உள்ளது.

விசுவமடுவில் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் உங்கள் அறிக்கையில் இடம் பெறவில்லை.கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட படை வீரர்களை சட் டத்தின் பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக நடமாட அனு மதித் தால் எமது பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் ஓடி ஒழிய வேண்டிய நிலைக்கு தள்ளப்ப டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அவர் களது குடும்பங்கள் சார்பில் தாங்கள் குரல் கொடுக்கின்ற பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டுமென மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரை பார்வையிட இங்கே அழுத்தவும்


Print Friendly, PDF & Email