SHARE

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது அமர்வில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர் இலங்கை மீதான போர்க் குற்றச் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மற்றொரு விசாரணை ஆணையத்தை நியமிக்க இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்றைய உரையில் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த அறிக்கையை அளித்த பச்லெட், உள்நாட்டு செயன்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புணர்வை வழங்குவதில் தொடர்ந்து தோல்வியுற்றன என்றும் மற்றொரு விசாரணை ஆணையகத்தின் நியமனம் இதை முன்னேற்றும் என நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

இந்நிலையில், இலங்கை தொடர்பான ஐ.நா.சபையின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email