SHARE

கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளுக்கு தேவையான அவசர சுகாதார மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு என 274 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் இலங்கை அரசாங்கத்திற்கு 1.3 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த பணம், ஆய்வக அமைப்புகளைத் தயாரித்தல், கொரோனா வரைஸினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை, தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படும் என்றும் அறிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், இலங்கையில் அமெரிக்கா முதலீடு செய்த 1 பில்லியன் டொலரில் 26 மில்லியனுக்கும் அதிகமான தொகை சுகாதாரத்திற்காக வழங்கப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Print Friendly, PDF & Email