SHARE

பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் ஜனாதிபதிக்கு கையொப்ப மனு

மிருசுவில் படுகொலையின் மரணதண்டனை கைதியான இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவின் பொதுமன்னிப்பு விடுதலை அதிர்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அதனை வாபஸ் பெறவேண்டும் எனவும் கோரி பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவத்தினால் கையெடுத்து மனு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மிருசுவில் பகுதியில் இரு சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தமைக்காக இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும்இ 41 வயதுக்கும் இடைப்பட்ட 8 தமிழர்களையே சுனில் ரத்நாயக்க் கொலை செய்தார். குறித்த சம்பவத்தில் இராணுவத்தின் பிடியிலிருந்து காயங்கயுடன் தப்பிய ஒருவர் இந்த தகவலை வெளிப்படுத்தியதன் பின்னரே குறித்த படுகொலை தெரியவந்ததுடன் எட்டுபேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில் இராணு அதிகாரி சுனில் ரத்நாயக்க கொலை செய்தமை உறுதி செய்யப்பட்டு அவருக்கு மேல் நீதிமன்றினால் மரணதண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை உட்பட உலக நாடுகள் கொரானா வைரஸின் தாக்கத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கையில் அதனை சாதகமாக பயன்படுத்தி குறித்த கொலை குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளார்.

இந்நிலையிலேயே நீதிமன்றினால் உறுதிசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய பொது மன்னிப்பு விடுதலையை ஜனாதிபதி மீளப்பெறவேண்டுமென கோரி பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் கையொப்ப மனுவொன்றினை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இங்கிலாந்து கனடா பிரதமர்கள் உள்ளிட்ட உலக நாடெங்கிலுமுள்ள 15 முக்கியஸ்தர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள குறித்த மனுவில்

கோத்தபாய தனது முடிவினை உடனடியாக மீளப்பெறாவிட்டால் சர்வதேச சட்டத்தை பின்பற்றுதலே நாகரீமடைந்த உலகில் சர்வதேச உறவுகளுக்கு அடிப்படையாக கருதும் அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கையொப்ப மனுவினை பார்வையிட பின்வரும் இணைப்பிணை அழுத்ததவும்.

http://chng.it/MV2Cvvp77d

Print Friendly, PDF & Email