SHARE

தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா.சம்பந்தன் ´தி ஹிந்து´ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய சம்பந்தன், தமிழர் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புதிய தருணம் பிறந்துள்ளதென கூறியதாக ´தி ஹிந்து´ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழர்கள் உரிமைகளை பெற்றுக் கொடுக்க ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் அதனால் ஐக்கிய இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பெற முடியாது எனவும் சம்பந்தன் மட்டக்களப்பில் கூறியதாக ´தி ஹிந்து´ பத்திரிகை தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email