SHARE

அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இந்த புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவை இணையம் ஊடாக பார்ப்பதற்கான அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அடையாள அட்டையில், மிகவும் துல்லியமான தரவுகள் உள்ளடக்கப்படுவதுடன், பல்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் இந்த அடையாள அட்டையல் உள்ளடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப் பயணம் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பெறுதல் முதல் ஓய்வூதியங்கள், சமுர்த்தி சலுகைகள், வருமான வரி மற்றும் வாக்களிப்பு என பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது பயோ-மெட்ரிக் டிஜிடல் அடையாள அட்டைகளின் தேவை குறித்து முன்மொழியப்பட்டிருந்தது. அதன் ஆரம்ப திட்டம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

புதிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணி, நிபுணர் குழுவொன்றின் கீழ் தகவல், தொழிநுட்ப நிறுவனத்தின் முழுமையான வழிகாட்டலின் கீழும் ஜனாதிபதி செயலணியொன்றின் கண்காணிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Print Friendly, PDF & Email