SHARE

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் மூன்றாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சற்று முன்னர் சைபர் தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் மேற்கொண்டுள்ளது.

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கோத்தபாயவின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சைபர் வழித்தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை ஒன்றையும் அமைத்தநிலையில் இன்று அவர்களுக்கு தண்ணிகாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

Print Friendly, PDF & Email