SHARE

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள தூதரகத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொலை குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பணியாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், தூதரகம் தென் கொரிய பொலிஸாருடன் இணைந்து தற்கொலை மற்றும் விபத்து தொடர்பான மற்ற இரண்டு மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இலங்கையைத் தவிர, மற்ற இருவரும் சட்டபூர்வமாக தென் கொரியாவில் வசிக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று இலங்கையர்களின் உடல்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மூன்று இலங்கையர்களின் உடல்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email