SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழர்களின் கட்டளையை ஏற்று பதவி விலகவேண்டும் அல்லது போனால் அவரை கூட்டமைப்பு விலக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான அவர் அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருந்து சுமந்திரன் கூட்டமைப்பிலிருந்து விலகவேண்டும் என்று கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதில் நீதவானும் சட்டத்தரணியுமான மனோண்மணி சதாசிவத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையொப்ப மனுவில் தமிழர்கள் சொந்த சமூகத்திலுள்ள துரோகிகளால் தொடர்ந்தும் துரோகம்செய்யப்படுகிறோம்.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான சுமந்திரன் தான் கூறிய கருத்தை பொறுபேற்று பதவி விலகவேண்டும். அவ்வாறு அவர் தானாக விலாகாவிடில் தமிழ் மக்களின் ஆணையை ஏற்று கூட்டமைப்பு அவரை விலக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்துச் சுதந்திரத்தை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு சுமந்திரனின் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை முறையாக மதிக்கையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கத்தையும், கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தனது சொந்த நிகழ்ச்சி நிரலைத் தீர்ப்பதற்கான தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த அவர் அனுமதிக்கக் கூடாது என்பதை நாம் தெளிவாகக் கூற விரும்புகிறோம். ஏன குறித்த யையொப்பத்திற்கான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையொப்ப மனுவினை பார்வையிட இங்கே அழுத்தவும்

https://www.change.org/p/tna-spokesperson-m-a-sumanthiran-call-for-ma-sumanthiran-to-resign-call-for-tna-to-respect-the-mandate-of-tamils?recruiter=1019164907&recruited_by_id=156ccdb0-0276-11ea-a466-0736a591ce80&utm_source=share_petition&utm_medium=copylink&utm_campaign=psf_combo_share_abi&utm_term=304c21d7e6e34b35acda8cba2b31ec77

Print Friendly, PDF & Email