SHARE

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, றொபேட் ஓ பிளேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உங்களைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

அதற்கு பிளேக், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.

எனினும், அந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்படவில்லை.

Print Friendly, PDF & Email