SHARE

newsimg

வன்னியில்வள்ளிபுனம்பகுதியில்அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின்மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள்உட்பட 62 பேர்படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்மக்களின்வரலாற்றில்மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின்நீண்ட சோக வரலாற்றில் ஹ2006 ஆகஸ்ட் 14 ஈனர்படைகளின்ஈவிரக்கமற்ற தாக்குதல்களால்பரிதாபகரமாகக்
கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின்குருதியால்எழுதப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய மாணவி கஐhனி சுப்பிபரமணியம் மற்றும் படுகாயமுற்ற காயமுற்ற மாணவிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் குணசேகரம் மதனருபன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தமது கண்ணால் கண்ட காட்சிகளை ஐp.ரி.வியின் உறவுகள் சங்கமம் நிகழ்ச்சியில் முன்வந்து பகிர்ந்து கொண்டார்கள். கொல்லப்பட்டவர்களில்சிலரது உடல்கள்சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில்பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும்சிலர்கைகள்இ கால்கள்இரண்டையும் இழந்திருப்பதாகவும்கூறப்படுகிறது.

செஞ்சோலை வளாகத்தில்அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல்கொல்லப்பட்டவர்கள்விடுதலைப் புலிகள்இயக்கத்திலுள்ள சிறுவர்போராளிகளெனக்கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும்ஆத்திரமடையச்செய்துள்ளது.

ஆனால் சம்பவ இடத்திற்கும்வைத்தியசாலைகளும்நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும்யுனிசெப்பும்கொல்லப்பட்டவர்கள்அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது.

இலங்கை விமானப்படைகள்தமிழர்தாயகத்தின்மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள்ஏராளம். இதில்பள்ளி மாணவர்கள் இபச்சிளம்குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக்கொடியது.

இந்த இனப்படுகொலைச் சம்பவத்தின் கண்கண்ட நேரடிச்சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவி கஐhனி சுப்பிபரமணியம் குணசேகரம் மதனருபன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தம்போன்ற ஏனையவர்களும் துணிந்து வெளிவந்து யுத்த குற்ற விசாரணைகளில் சாட்சியமளித்து கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு நியாயம் தேட வேண்டு;ம் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.

newsimg2

Print Friendly, PDF & Email