SHARE

theepan6கடந்த ஞாயிறு (15.02.2015) முதல் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையகத்தால் பயிற்றுவிக்கபட்டு, மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த, முல்லைத்தீவு சிலாவத்தையைத் சேர்ந்த சந்திரமோகன் மோகனதீபன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்திடமும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று தனது உறவினர்களை சந்திக்க சென்ற இவர் வீடு திரும்பவில்லை என்று இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்பதும், இவரது குடும்பம் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளது. இவரது ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் ஏற்கனவே காணாமல் போயிப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது காணாமல் போன சகோதரர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததுடன், பிரித்தானிய பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள் அண்மையில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்தில் அல்லது பொலீஸ் நிலையத்தில் தொடர்புகொள்ளும் படி வேண்டப்படுகின்றனர்.

Print Friendly, PDF & Email