SHARE

வன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

anaikulu_vavuniya

காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தும் மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நேற்­றைய தினம் நடை­பெற்­றன. இதன்போது கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­டவாறு கூறினார். அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கை யில்,

எனது மகள் அனு­சியா கிளி­நொச்­சியில் அரச துறையில் பணி­பு­ரிந்து கொண்டு எனது சகோ­த­ரி­யோடு வாழ்ந்து வந்தார். இந் நி­லையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயி­ருந்தார்.

இவ்­வாறு இருக்­கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு பதிவு ஒன்றை மேற்­கொள்­வ­தற்­காக நான் ­சென்­றி­ருந்தேன். இதன்­போது எனது மகளை அங்கு கண்டேன். எனினும் எனது மகள் என்னைக் காண­வில்லை. அவர் சற்று தூரத்­தி­லேயே நின்­றி­ருந்தார். அப்­போது அவர் வெள்ளை நிற உடை­ய­ணிந்­தி­ருந்­த­துடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்­தி­ருந்தார். இந்­நி­லையில் எனது மகள் உட்­பட சிலரை அங்கு வந்த அதி­கா­ரிகள் வாக­ன­மொன்றில் ஏற்­றிக்­கொண்டு சென்­றனர். அங்கு நின்ற அதி­கா­ரி­க­ளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்­லப்­ப­டு ­கி­றார்கள் எனக் கேட்­ட­போது நீதி­மன்­றத்­துக்கு கூட்டிச் செல்­வ­தாக அந்த அதி­காரி பதில் வழங்­கி­யி­ருந்தார். இதன்­போது அந்த அதி­கா­ரி­யிடம் எனது மகளின் பெயர் விப­ரத்தை கூறி வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­ப­டு­ப­வரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறினேன். அதற்கு அந்த அதி­காரி அத்­த­கைய பெயர் இல்லை எனத் தெரி­வித்தார்.

அவ­ரு­டைய கூற்று அவ்­வா­றாக அமைந்­தி­ருந்­தாலும் நான் கண்­டது எனது

மகளைத் தான். அது எனக்கு நன்­றாக தெரியும்.

அத்­தோடு எனது மகள் மற்றும் அவ­ரோடு சேர்த்து மேலும் பலர் நிற்­ப­தாக இருக்கும் படத்தை முகப்­புத்­தகம் ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்த்தேன். எனவே என்­னு­டைய மகள் உயி­ரோ­டுதான் உள்ளார். தயவுசெய்து அவரை என்­னிடம் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்­குழு அதி­கா­ரி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இதே­வேளை தன்­னு­டைய பிள்ளை உட்­பட எட்டுப் பேரை இரா­ணு­வமே சித்­தி­ர­வதை செய்து படு­கொலை செய்­தது என http://www.cialisgeneriquefr24.com/medicament-cialis-generique/ ஆணைக்­குழு முன்­னி­லையில் தந்தை ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் மகனின் படு­கொ­லைக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் கோரிக்கை விடுத்தார்.

அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எனது மகன் சந்­தி­ர­சே­கரம் யாழ்ப்­பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் இருந்த கூட்­டு­றவு சங்­கத்தில் காவ­லா­ளி­யாக பணி­பு­ரிந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 19 திகதி அன்று இரவு அரி­யா­லையில் இருந்த இரா­ணுவ முகாமைச் சேர்ந்த இரா­ணு­வத்­தினர் எனது மக­னையும் அவ­ரோடு சேர்த்து வேறு எட்டுப் பேரையும் பிடித்து சென்­றனர்.

இத­னை­ய­டுத்து நான் எனது மகனை தேடி குறித்த இரா­ணுவ முகா­மிற்குச் சென்ற போது அங்­கி­ருந்த இரா­ணு­வத்­தினர் என்னை தாக்க வந்­த­துடன், உங்­க­ளது மகனை தேட வேண்டாம் அவர் இங்கு இல்லை என கூறினர்.

காலப்­போக்கில் கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் எனது மகன் உட்­பட எண்மர் இரா­ணு­வத்­தி­னரால் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே எனது மகன் உயிரோடு இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்துடன் எனது மனைவியும் இன்னொரு மகனும் விமானத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். எனவே வறுமை நிலையில் இருக் கும் எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

 

http://www.virakesari.lk/article/3726

Print Friendly, PDF & Email