Home சிறப்புச் செய்திகள் இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்

இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்

478 views
0
SHARE

இலங்கையில் அதிகரித்து வரும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன என இலங்கை மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல் போனோரை தேடும் பணியில் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

1
திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய, ஓட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த, 34 வயதுடைய, திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன் என்பவரை கடந்த 26 பெப்பிரவறி 2016 முதல் காணவில்லை என்று அவரது மனைவி மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். மனித நேய கண்ணிவெடிப்பிரிவில் பணியாற்றிய அவர் பின்னர் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக சேவையாற்றியவர். நாடு திரும்பிய பின்னர் பல தடவை இவர் அச்சுறுத்தப்பட்;டதும் மனித உரிமைகள் குழுவிடம் பதிவாகியுள்ளது. இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2
திரு. வடிவேலு வசந்தராஜன்

பூனகரி நல்லூரை சேர்ந்த, 32 வயதுடைய, திரு. வடிவேலு வசந்தராஜன் என்பவர் கடந்த 25 யூலை 2016 அன்று இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டதாக இன்னுமொரு முறைப்பாடு மனித உரிமைக்குழுனரால் கிடைக்கப் பெற்றுள்ளது. அவரது வீட்டுக்கு அண்மையில் உள்ள வீதியில் காத்திருந்த இனம்தெரியாதோர் அவர் அந்த வழியால் செல்லும் போது, வழி மறித்து, ஒரு வானில் இழுத்துச் சென்றதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். மேலதிக விசாரணைகளின் படி இவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய, முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

3
http://www.cialispharmaciefr24.com/cialis-guerison/ திரு. சிலுவைராசா மார்க் ரொலன்ஸ

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும், வவுனியாவில் வசித்து வந்தவருமாகிய, திரு. சிலுவைராசா மார்க் ரொலன்ஸ் என்பவர் கடந்த 01 ஆகஸ்ட் 2016 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளை

வானில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் இதுவரை தகவல் அவர் பற்றி எந்த தெரியவில்லை என்றும் இவரது தாயார் மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்க்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், ஆயினும் இதுவரை இராணுவத்திடம் சரணடையாமல் இருந்தவர் என்றும் தெரிகின்றது. இவருடைய இரு சகோதரர்களும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினராக இருந்துதும் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதும்; குறிப்பிடத்தக்கது.

 திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம்
திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம்

இது மட்டுமன்றி, ஓட்டுசுட்டான் முல்லைத்தீவைச்சேர்ந்த,திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம் என்ற வயோதிபருடைய வீட்டில் 09 ஆகஸ்ட் 2016 அன்று நள்ளிரவில் புகுந்த மூன்று ஆயுததாரிகள், அவருடைய மகன் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு, துப்பாக்கி முனையில் வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதான இன்னொரு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. தங்களை பொலீசார் என அறிமுகப்படுத்தி, அவர்களது மகன் திரு. இராசலிங்கம் மதுசன் தொடர்பாக விசாரணை செய்ய வந்திருப்பதாக கூறி வீட்டினுள் நுழைந்தவர்களே இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளனர். கடந்த பெப்பிரவறி 2016 இல் இதேபோல இனந்தெரியாத ஆயுததாரிகளால் திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம் தாக்கப்பட்டதும் மனித உரிமைகள் குழுவிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. வுpசாரணையின் போது, அவர்களது மகன் திரு. இராசலிங்கம் மதுசன் இலண்டனில் விடுதலைப்புலிகளை மீளக்கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இலங்கை அரசுக்கெதிரான சாட்சியங்களை திரட்டி ஐ.நா சபையிடம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுவருதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அவரை உடனடியாக நாடு திரும்பும்படியும் எச்சரித்துள்ளர்.

இது போல, 14 யூலை 2016 அன்று, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான திரு. சரவணமுத்து சந்திரபாலன் (வயது 58) என்பவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிகப்படும் அவர்கள், இலண்டனில் இருக்கும் அவரது மனைவி, சில புலம்பெயர் அமைப்புக்ளுடன் இணைந்து, இலங்கை அரசுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் உடனடியாக அச்செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் இவருக்கும் இவரது மகனுக்கும் உயிராபத்து ஏற்படும் என்றும் மிரட்டிவிட்டு சென்றமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடி காயங்களுடன் இவர் தற்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளராகிய இவரது மனைவி திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் விடுதலைப்புலிகளின் விளையாட்டுதுறை மற்றும் கல்விக்கழகத்தில் முக்கிய பணியாற்றிய காரணத்தால் 2014 இல் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டவர். அவர் பின்னர் தப்பிச்சென்று, தற்போது இலண்டனில் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகிறார். இறுதி யுத்தத்;தின் போது இடம்பெற்ற பல யுத்த குற்றங்களுக்கு கண்கண்ட சாட்சியான இவர், இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி பகிரங்கமாக நியாயம் கோரிவருபவர் என்பதும் தெரிய வருகிறது.

Untitled
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்கள் அல்லது மேலதிக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக இலங்கை மனித உரிமைக்குழுவை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Print Friendly