SHARE

1

ஓரு விடுதலைப்போராளியின்; வாழ்வும் அவனது போராட்டங்களும் அவன் கடந்து வந்து தடங்களும் உயிரணை என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது.

இது ஓரு போராளியின் உண்மைக்கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது, அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான், இறுதியில் என்னவானான் என நகர்கிறது நாவல். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான போராளிகளின் விடுதலைநோக்கிய பயணமும் அவர்களின் பயணத்தில் அவர்களின் மெல்லிய இதயங்களின் ஓரங்களில் துளிர்க்கும் இனிமையான காதல்களையும் மென்மையான உணர்வுகளையும் இந்த நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. தனிய ஒரு போராளியுடைய கதையாகவல்லாது அவனது காலத்தில் அவனோடு களமாடிய தோழர்களுடையதும் அவனுக்கு வழிகாட்டிய தளபதிகளுடையதும் இணைந்த கதையாக இந்நாவல் விரிகிறது.

2
எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி

எவ்வளவு நாட்களாக நீண்டு

சென்ற ஒரு பெரும் சரிதத்தை மிகவும் சுருக்கி மிக முக்கியமான சம்பவங்களில் இருந்து அதை கோர்த்து ஒரு புத்தகமாக வடித்திருக்கும் அந்த படைப்பாளி எவ்வளவு காலங்களாக சுமந்து வந்த அந்த நினைவுகளை திரட்டி அந்த உணர்வுகளை முடிந்தவரை வார்த்தை வடிவமாக்கி பிரசவித்திருக்கின்றார் ஒவ்வொரு மனிதர்களும் இவ்வாறு பல பல கதைகளை சுமந்து கொண்டே இருக்கின்றனர் இருந்தும் ஒரு சிலராலேதான் அதை படைப்பாக பிரசவிக்க முடிகின்றது. இந்தப் பெருமைக்குரியவர் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள்.எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு

சமூக முற்போக்கு சிந்தனைவாதி, கருத்தியல் போராளி, பெண்ணியவாதி மற்றும் கவிஞர். இவரது படைப்புக்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் எமது போராளிகளையும் தழுவியவை. விடுதலை உணர்வையும் வீர விழுப்புண்களையும் எமது கண்முன் ஆவண வடிவில் தருபவை. எதிர்கால சந்ததிக்கு எமது போராட்டத்தின் நியாயத்தை கதை வடிவில் எடுத்துச் செல்பவை. புலம் பெயர் மண்ணில் இப்படியான படைப்பாளிகள் நிச்சயம் தேவை.

நேசக் கரம் சாந்தி பற்றி தெரியாத முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அது மிகையாகாது. ஆயுதப்போராட்டம் மவுனித்த காலத்தில் இருந்து where to buy levitra கைவிடப்பட்ட எமது முன்னால் போராளிகளுக்கும் மக்களுக்கும் உதவும் உன்னத நோக்கில் தனிநபராக இவரால் உருவாக்கபட்டது தான் நேசக்கரம் என்னும் அறக்கட்டளை. கொடிய எதிரியுடனான யுத்த வடுக்களோடும், எமது சொந்த மக்களாலேயே புறக்கணிக்கபட்ட மனவடுக்களோடும் தற்கொலை நோக்கித் தள்ளப்ட்ட

எத்தனையோ போராளி குடும்பங்களை காத்து, அவர்களின் முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்திய தன்னலமற்ற சமூக சேவையாளர் இவர். இதுவே இவரது பெயருக்கு முன்னால் உள்ள ‘நேசக்கரம்’ என்ற அடைமொழியாகிவிட்டது. நேசத்திற்கு அடையானமான வாழ்ந்து காட்டி மற்றவரையும் வாழ வழிகாட்டுபவர் நமது நேசக்கரம் சாந்தி அவர்கள்.

போரியல் வரலாற்றில் இதுவரையில் வெளிவராத கதைகளோடு உயிரணை ஊடாக பயணிக்கும் காலத்தின் கதை பூவரசி பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த நூல் அறிமுகவிழா தமிழ் தகவல் நடுவத்தின் அனுசரனையுடன் Thulasi, Bridge end close, KT2 6PZ, Kingston Upon Thames. பிரித்தானியாவில் வருகின்ற சனிக்கிழமை ( 20-08-2016) மாலை 06:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

3

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த நூல் பற்றிய விமர்சனத்தை வழங்கவுள்ளார் மூத்த தமிழ்ப் பத்திரைகையாளரும், ஐடீஊ ஊடக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு. நிராஜ் டேவிட் அவர்கள். மேலும் பல நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

4
திருமதி. மெலனி திசாநாயக்க LLB (Col), LLM (Eng), Attorney-at-Law, Researcher – ICPPG, மனித உரிமை ஆர்வலர்
5
திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் (ளுடுவுளு) முன்னாள் உதவிக் கல்விக் பணிப்பாளர் – கிளிநொச்சி சிறுவர் விளையாட்டு குழு இணைப்பாளர் – TGTE
6
செல்வி. யதுனா சதானந்தன் BSc (SL), MBA (England) Former Project Co-ordinator – CARE
7
செல்வி. ருபினி கனகரஞ்சிதன் BSc (SL), MSc (England), Former Analytical Chemist Government Analytical Department
8
செல்வி. தர்சிகா சிறிசிவகுமார் HND (Management) Radio Presenter – ILC ஊடகவியலளர்

அத்துடன் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் எதிர்நோக்குகின்ற சவால்களும் அவர்களின் கௌரவத்தை மீள நிலைநாட்ட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்பதுபற்றிய கலந்துரையாடலும் நூல் அறிமுகத்தை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

Print Friendly, PDF & Email