SHARE

1

2

கடந்த 20.08.2016 அன்று பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவத்தின் (Tamil Information Centre) அனுசரணையில் துளசி இல்லத்தில் ‘உயிரணை’ – உயிரைப் பணயம் வைத்து அணையாக இருந்து தமிழரைக் காத்த போராளி ஒருவரின் நூல் அறிமுகவிழா இடம்பெற்றது. பிரதம அதிதிகளாக முன்னாள் மாணவர் பேரவையின் தலைவரும், தமிழீழ ஆயுத போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவருமான மதிப்பிற்குரிய  திரு. சத்தியசீலன் அவர்களும், தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மூத்த பத்திரிகையாளரும், இராணுவ ஆய்வாளரும், IBC ஊடக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு நிராஜ் டேவிற் அவர்களும் கலந்து கொண்டனர். அகவணக்கத்துடனும் மங்கள விளக்கேற்றலுடனும் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியானது ஒருங்கமைப்புக் குழுவின் செல்வி. தர்சிகா சிறீசிவகுமாரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

நூலின் சிறப்புப்பிரதிகளை முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர் திரு. சத்தியசீலன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது பிரதியை தமிழ் தகவல் நடுவத்தின் நிறுவனர் திரு. வரதகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

3

சிறப்புரைகளை திரு. நிராஜ் டேவிற் அவர்களும், மனிதவுரிமைகள் சட்டத்தரணி திருமதி.மெலனி திசநாயக்காவும் ஆற்றியிருந்த வேளையில் உயிரணை நூலின் கருத்துரைகளை முன்னாள் துணுக்காய் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் மாவீரர் அன்புமணியின் சகோதரி திருமதி யதுனா சதானந்தன் ஆகியோரும் வழங்கினர். நூலுக்கான ஏற்புரையை நூலின் ஆசிரியர் நேசக்கரம் சாந்தியும் வழங்கியிருந்தனர்.

4
விடுதலைப் போராட்டத்தை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து பலவீனப்படுத்தும் முகமாக ஆரம்பித்த சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் 2004 இல் கிழக்குமாகாணத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரதேசவாதத்தை ஊடகத்துறையுடன் இணைந்து செயற்ப்பட்டு விடுதலைப் போராட்டத்தை காத்து மேற்குலக மக்களை நெறிப்படுத்தியதிற்கு பெரும் உதவிசெய்தவர்களுள் நேசக்கரம் சாந்தியும் ஒருவராவர். ஆவணப்பதிவுகளற்ற தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளையும் இவர் ஆவணப்படுத்தல் செய்வதன் மூலம் எம்மினத்தின் வரலாறுகளை பேணுவதில் பெரும் பங்கேற்று வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமென திரு. நிராஜ் டேவிற் தனது உரையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது: ‘இன்றுவரை இலங்கையில் தொடர்ந்தும் போராளிகள் படும் துன்பங்களும் அவர்களின் அவலநிலைகளையும் பற்றிய ஆதாரபூர்வமான உண்மைத் தரவுகளையும் மற்றும் அவர்களின் அவலத்திற்கு காரணமான விடையங்களையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் முன்னாள் போராளிகளின் நலனுக்காக பாடுபடவேண்டிய பொறுப்பு அனைவரது கரங்களிலும் உள்ளது எனவும் வலியுறுத்தினார்’.

திருமதி மெலனி திசநாயக்கா
திருமதி மெலனி திசநாயக்கா

திருமதி மெலனி திசநாயக்கா அவர்களின் உரையில்;: ‘இலங்கை அரச ஊடகங்களின் ஓரவஞ்சகமான செய்திகளால் மட்டும் இலங்கை இனப்பிரச்சனையானது ஒரு தீவிரவாதமானதாக எம்மினத்திடையே நிலைபெற்றிருந்த கருத்தினை இவ் ‘உயிரணை’ நூல் தகர்த்து போராட்டத்தின் உயிருள்ள தன்மையை எனக்கும் உணர்த்தியது. வேலைக்காக இராணுவத்தில் இணைந்த எம்மினத்திடையே தமது தாயக பூமிக்காக தமதுயிரைத் தியாகம் செய்த விடுதலைப்போராளிகளின் வீரம்சிறந்த போராட்டத்தின் வராலாற்று உண்மையை உணரவைத்தது. மேலும் இலங்கை அரசின் நீதியற்ற செயற்பாட்டால் புத்தரை வணங்கும் இனத்திலிருக்கும் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’. என்றார்.

திருமதி யதுனா சதானந்தன்.
திருமதி யதுனா சதானந்தன்.

‘இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் மனங்களை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு உதவிகள் வழங்குவது போல ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்கள் ஆயிரம் உதவிகளைச் செய்து எமது மக்களின் மனநிலைகளை மாற்ற முயற்சித்தாலும் எமக்கு நடந்த இழப்பும் அவற்றுக்கான நீதியும்; கிட்டும்  வரை எமது போராட்டம் ஆயுதங்கள் மௌனித்ததாக இருந்தாலும் கருத்துக்களால் அதனை முன்னெடுப்போம்’ என்று தனது உள்ளக் கிடக்கையை இதன்போது வெளியிட்டார் மாவீரர் அன்புமணியின் சகோதரி திருமதி யதுனா சதானந்தன்.

திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன்
திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன்

மேலும் முன்னாள் கிளிநொச்சி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் அவர்களுடைய உரையில் ‘எமது விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பல்வேறு அற ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டிருந்ததை  இறுதிவரை கண்னூடாக காணக்கூடியதாக இருந்தது. போர் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் எமக்காக மடிந்தாலும் அவர்களது ஒழுக்கம் என்றும் ஒரு வீர காவியமாகவே காணப்படும். இவ்வொழுக்கங்கள் கூட எமக்கு ஒரு விடிவைத் தரக் கூடியதாக அமையும்’ என்றார். அவருடைய கருத்தில் மாவீரர்களின் தியாகத்தின் உருக்கத்தையும் வலிமையையும் இந்நூலின் மூலமாக மீண்டும் வெளிப்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான ஒரு அருமையான, மிகவும் தேவையான படைப்பை வழங்கிய நேசக்கரம் சாந்தி அவர்களின் சேவையை அனைவரும் பாராட்டினர். நேசக்கரம் சாந்தி அவர்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமன்றி, கருத்தியல் போராளியாக தமிழின விடுதலைக்கு ஆற்றிவரும் அரும் சேவைகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. தனிநபராக Nஐர்மனியில் நேசக்கரம் என்ற அமைப்பை நிறுவி எத்தனையே முன்னாள் போராளிகளை பாராமரித்து வரும் அவரின் தாயுள்ளத்தை அனைவரும் பாராட்டினர்.

திரு சவரிமுத்து பாக்கியநாதன்
திரு சவரிமுத்து பாக்கியநாதன்

இதனைத் தொடர்ந்து மக்களின் மனதினைத் தொட்ட விடுதலையை எடுத்தியம்பும் எழுச்சிமிக்கப் பாடலை திரு சவரிமுத்து பாக்கியநாதன் வழங்கி மக்களை மீண்டும் வலிமிக்க கடந்த காலத்தினுள் இட்டுச் சென்றது.
நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து ‘போராளிகள் நிலத்திலும் புலத்திலும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சமகால நிலவரங்கள்’ பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

தமிழ் தகவல் நடுவத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் கலந்துரையாடலை நெறிப்படுத்தினர். இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பிர்களாகிய திரு. யோகலிங்கம் மற்றும் திரு. திருக்குமார் அவர்களுடன் முன்னாள் போராளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.

9எமது மக்களின் விடுதலைக்காக ஆயுத போராட்டத்தில் தமது இளமையை தியாகம் செய்து, அங்கங்களை இழந்து இன்று அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ள எமது முன்னாள் போராளிகளை தமிழர்களாகிய நாமே மறந்துவிட்ட நிலைபற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது. பண மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவது மட்டுமன்றி, அவர்களின் தியாகங்களாலேயே இன்று நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம் என்ற உண்மையை மறக்காமல், அவர்களுக்கான சமுதாய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் என்ன உதவி செய்கின்றன என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன. உதவிகள் அற்று சட்ட ஆலோசணைகள் உளவள ஆற்றுப்படுத்தல்கள் தேவைப்படும் போராளிகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

10இதன் முதற்கட்டமாக இலங்கையில் தற்போது வசித்துவரும் முன்னாள் போராளிகள் அனைவரின் பெயர் விபரப் பட்டியலும் அவர்களின் தேவைகள் பற்றிய புள்ளிவிபரமும் திரட்டப்பட வேண்டும் என்றும்  இந்த பணியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து உள்ளதாக நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் வாக்குறுதியளித்தார்கள். இந்தப் பணியை அடுத்த ஆறுமாதங்களில் நிறைவுசெய்யப்படும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். என அவர்கள் வாக்குறுதியளித்தனர். போராளிகள் நலன்பேணும்

அமைப்பொன்றின் தேவைபற்றியும் இங்கு கருத்துரைக்கப்பட்டது.

 

11
பல அமைப்புக்களின் பிரதிநிதிகள், வேறுபட்ட மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள், பல இன மக்கள் என பலதரப்பட்டவர்களும் தமது அரசியல் மற்றும் தனிநபர் வேற்றுமைகளை கடந்து, எமக்காக தம்மை தியாகம் செய்த முன்னாள் போராளிகளின் தேவைகள் பற்றி கலந்துரையாட ஒன்று கூடியிருந்தமை மிகவும் மனதை நெகிழ வைத்தது. எனினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக தம்மை இனம் காட்டிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த நிகழ்வை புறக்கணிப்பு செய்திருந்தமை மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. அவர்கள் இந்த நிகழ்வை மட்டுமன்றி, முன்னாள் போராளிகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிஸ்கரித்து வருவதும், முன்னாள் போராளிகள் நலன் சம்பந்நதப்பட்ட விடயங்களில் பின்னிப்பதும்,  மிகவும் வேதனையளிப்பதாக இருப்பதாகவும் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். புpரித்தானிய தமிழர் பேரவை போன்ற பிரபலமான அமைப்புக்கள் முதலில் முன்னாள் போராளிகளுக்கான அங்கீகாராத்தை வழங்கி, சமூகத்துக்கு வழிகாட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் பல ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வுடன் நூல்வெளியீட்டுநிகழ்வு நிறைவேறியது.

செய்தி தொகுப்பு: ரூபினி

Print Friendly, PDF & Email