SHARE

12009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  தமிழ் இனப்படுகொலையொன்றை சர்வதேசம் பார்த்திருக்க மேற்கொண்ட  இலங்கை அரசு இன்று ‘நல்லிணக்கம்’ என்ற புது வடிவான ஒடுக்குமுறை அரசாட்சியொன்றை இலங்கைத்தீவில் நிறுவியிருக்கிறது.

அங்கு பெயரளவுக்கு ஆட்சியொன்று மாறியிருக்கிறது ஆனால்  பழைய காட்சிகள் ஏதும் மாறவில்லை. மகிந்த போய் மைத்திரி வந்திருக்கிறார் அவ்வளவே மாற்றம் மற்றபடி அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றனர், அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, அவர்கள் நடமாடும் சுதந்திரம் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் கட்டுப்படுத்தப்படுகிறது, தொழில்சுதந்திரம் தமிழர்களுக்கு இல்லை, அரச சேவைகள், அரசவேலை வாய்ப்புக்கள் என்பனவற்றை பகிர்ந்து வழங்குவதில் இன ரீதியான பாகுபாடுகள் இன்னும் தொடர்கின்றன, எங்கும் எல்லாவற்றிலும் பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது.

2இன அழிப்பின் தொடர்ச்சியாய்  கட்டமைக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்றது, தமிழர் பிரதேசங்களில் பௌத்தவிகாரைகள் மூலைக்கு மூலை அமைக்கப்படுகின்றது, இனக்கலப்பு திருமணங்கள் என்ற பெயரில் தமிழர்கள் சிங்களவர் ஆக்கப்படுகின்றனர், தமிழ்ச்சிறார்கள் பௌத்த துறவிகளாக்கப்படுகின்றனர் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் முள்ளிவாய்க்காலில் மகிந்த அரசு மேற்கொண்ட மனிதப்படுகொலைகளுக்கு மேலான கலாச்சாரப்படுகொலையொன்றை மைத்திரி அரசு தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.

மகிந்த அரசு சட்டத்துக்கு முரணாக மேற்கொண்ட பலவற்றை மைத்திரி அரசு சட்டத்தின் உதவியோடு இன்று மேற்கொள்கிறது. யுத்தம் முடிந்து 7ஆண்டுகள் கடந்தும்  இன்னும் தமிழ் அரசியல்கைதிகள்

3
திரு. கஜீவன் தழிழழகன்

விடுவிக்கப்படவில்லை. நாம் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அவசரகால சட்டத்தை நீக்குவோம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம், அரசியல்கைதிகளை விடுவிப்போம் என்று கூறிய மைத்திரி அரசு  பெயருக்கு அவசரகால சட்டத்தை நீக்கிவிட்டு அதனிலும் கொடிய சர்வதேச நீதிகளுக்கு அப்பாற்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் சட்டநடவடிக்கைகள் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையினை விட அதிகமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், அவை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படுவதாய் கூறும் அரசு அவர்களின் விடுதலை தொடர்பாயும் விசாரணைகள் தொடர்பாயும் எந்தவிதமான சட்டவிதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை, இன்றும் பலர் காணாமல் போகின்றனர், உயிர் அச்சுறுத்தல் காரணமாய் பலர் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக விளங்குபவர் திரு. கஜீவன் தழிழழகன். இவர் இதே போல 2014 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் நிறுத்தப்படாமல் தடுப்பில் வைக்கபட்டு சித்திவரை செய்யப்பட்டவர். ஆதிஸ்டவசமாக தப்பி, நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் கோரியுள்ள இவர், தன்னைப்போன்ற அரசியல் கைதிகளுக்கு நியாயம் தேடி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் போதிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

திரு. சுமன் சுந்தரலிங்கம்
திரு. சுமன் சுந்தரலிங்கம்

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கபட்டு கடத்தப்படுவது பற்றி பல ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த திரு. சுமன் சுந்தரலிங்கம் என்பவர் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார். இவர் போருக்குப்பின்னர் 2011ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்கு அகதியாக சென்று பின் அங்கிருந்து 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். அதன் பின் வவுனியால் அவர் தன் வாழ்வாதரத்திற்காக மெக்கானிக் வேலை செய்துகொண்டிருக்கும்போது அரச புலனாய்வாளர்களால் இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக்கு திருப்பி அனுப்பினால்  தான் இலங்கையில் வைத்து கடத்தப்படுவேன் அல்லது கைதுசெய்யப்படுவேன் எனறும்; உயிருக்கு பாதுகாப்பில்லையென்றும் சுவிஸ் அரசிடம் அவர் தஞ்சம் கேட்டிருந்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் அவரை திருப்பியனுப்பி இருந்தனர். அதேபோல் நாடு திரும்பிய சில காலத்தின் பின்னர் அவர் கடத்திச் செல்லப்பட்டு கடும் துன்புருத்தல்களுக்கு ஆளாகியிருந்தார். உறவினர்களின் கடும் முயற்சியால் லஞ்சம் கொடுத்து வெளியே வந்தவர் மீண்டும் அச்சுருத்தல்களும் உயிராபத்தும் தொடர்ந்ததால் நாட்டைவிட்டு வெளியேறினார். இவரின் சகோதரர்  முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதிப்போரின்போது  சரணடைந்து காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திரு. சுமன் சுந்தரலிங்கம்
திரு. ஜனார்த்தனன் கிருஸ்ணமூர்த்தி

அதே 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த திரு. ஜனார்த்தனன் கிருஸ்ணமூர்த்தி என்பவரும் கொழும்பில் வைத்து இலங்கை அரச புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டிருந்தார். முன்னாள் விடுதலைப்புலிகளின் மறைமுக உறுப்பினராக செயற்பட்ட இவர் இலண்டனில் கல்வி கற்றுக் கொண்டிருந்து விட்டு, உடல் நலம் குன்றிய தனது தந்தையை பார்வையிட இலங்கைக்கு திருப்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட புலனாய்வாளர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இவர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். பெற்றோல் நிரப்பப்பட்ட பொலித்தீன் பையை முகத்தில் மூடிக்கட்டியும், பல உபகரணங்களால் அடித்தும், இன்னும் பல வழிகளில் கொடூர சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தார். கடத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 நாட்களின் பின் உறவினர்களின் முயற்சியால் தடுப்பில் இருந்து தப்பித்த இவர் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்டடுள்ளார். அகதி தஞ்சம் நிராகரிப்பட்டு திருப்பி அனுப்பப்டுபவர்கள் மட்டுமன்றி சுயமாக திரும்பிச் செல்பவர்கள் கூட இலக்கு வைக்கப்பட்டு கடத்தபடுவதற்கு இவர் வாழும் சாட்சியாக உள்ளார்.

 

 

திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்
திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்

மேலும் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன் என்பவர் 2016 மாசி மாதம் இத்தாலியில் இருந்து இலங்கை திருப்பியனுப்பப்பட்டபோது இலங்கை புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு 23 நாட்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தார். முன்னாள் போராளியான இவர் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து  2009 செப்ரெம்பர் மாதம் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அங்கிருந்து இத்தாலிக்கு சென்று பின் சுவிஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். சுவிசில் இருந்து இத்தாலிக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்த அவர், இலங்;கையில் சுமுக நிலை திரும்பி விட்டதாக நம்பி, இலங்கைக்கு திருப்பி கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக் சுயமாக திரும்பிச் சென்ற போதே மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் பல்வேறு அமைப்புக்களிடம் முறையிட்டும் எந்த பலனும் இன்றி இறுதியில் உறவினர்களின் முயற்சியால் லஞ்சம் கொடுத்து தப்பிய அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்ததால் மீண்டும் லண்டனில் தஞ்சம் கோர நிர்ப்பந்திக்கபட்பட்டுள்ளார்.

இவை இந்த ‘நல்லாட்சி’ அரசாங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கைதுகளினதும் கடத்தல்களினதும் சிறு உதாரணங்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள முன்னாள் போராளிகளையும், ஏனையோரையும் இலங்கையில் நல்லாட்சி இடம்பெருகிறது எனவே நாடுதிரும்புங்கள் என்று கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு கோரிக்கை விடுக்கும் இலங்கை அரசு அவ்வாறு நாடுதிரும்பும் புலம்பெயர்தேசத்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்குமா? நாம் அவர்களை ஒருபோதும் கைது செய்யமாட்டோம், அவர்கள் மீது வழக்கு தொடரமாட்டோம், அவர்கள் கடத்தப்படமாட்டார்கள், காணமல் போகடிக்கப்படமாட்டார்கள், படுகொலைக்கு ஆளாக்கப்படமாட்டார்கள்,  அச்சுறுத்தழுக்கு உற்படுத்தப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசால் உத்தரவாதம் அளிக்கப்படமுடியுமா?

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவிசெய்ததும் உதவிசெய்வதும் சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது. அந்த சட்டத்தின் பிரகாரம் நாடுதிரும்பும்  தமிழர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கு 100 வீத வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ள பலர் இந்த புதிய ஆட்சியில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவை சட்டரீதியான கைதுகள் நீதிமன்ற விடையங்களில் அரசு நேரடியாய் தலையிடமுடியாது அது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று இலகுவாய் நியாயம் கற்பித்து தப்பிவிடுகிறது அரசு.

சட்டநடவடிக்கைக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வழக்குகள் எவையும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு அவர்களுக்கான நீதி தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கையின் நீதித்துறை அரசியல் கைதிகள் விடையத்தில் கடும்போக்குத்தனமாய் செயற்படுகிறது, நீதி மறுக்கப்பட்டவர்களாய் முன்னாள் போராளிகள் சிறைச்சாலைகளில் வதைபடுகின்றனர், தம் வழக்குகளை துரிதமாய் விசாரித்து தீர்ப்பை வழங்குங்கள் இல்லையேல் எம்மை சாகவிடுங்கள் என உணவுதவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர், பலர் சிறைச்சாலைகளில் மனநோயாளிகளாயும், மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்களாயும் நடைபிணமாய் வாழ்கின்றனர். இவர்கள் விடையத்தில் இலங்கை அரசு எந்தவொறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்திருந்தபோது முன்னாள் போராளிகளின் வழக்குகளை துரிதமாய் விசாரித்து தீர்வை வழங்குவோம் என்று உறுதியளித்திருந்த அரசு இன்றுவரையும் ஒரு அரசியல்கைதியை கூட விடுதலை செய்யவில்லை. காலம் காலமாய் சர்வதேச பிரதிநிதிகளுக்கு உத்தரவாதங்களை வழங்குவதும் பின் அதை மீறுவதுமே இலங்கை அரசின் வாடிக்கையாக இருந்துவருகின்றது.

நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பல முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவற்றை இயற்கை மரணங்கள் என நீதித்துறை மூடி மறைக்கிறது, நிமலரூபன், மரியதாஸ் தில்ருக்ஷான், சுந்தரம் சதீஸ் உற்பட பலர் இலங்கை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்திருக்கின்றனர். இவர்களின் மரணங்கள் எவ்வாறு நடந்தன என்று இலங்கை அரசு இன்னும் பதில் சொல்லவில்லை. இவர்களின் மரணங்கள் தொடர்பாக உறவினர்களால் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 7 ஆண்டுகள் விசாரணைகள் ஏதுமின்றி தடுத்துவைக்கப்பட்டு இறுதியில் உயிரற்ற உடலாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார், இவையெல்லாம் புதிய அரசின் ஆட்சியின் போது இடம்பெற்றவை, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த அரசியல் கைதிகள் தொடர்பாக ஒரு நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் இறந்துபோனவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று இன்றுவரையும் பல அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டகள் செய்கின்றனர் எனினும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொண்டதேயில்லை. இதுதான் இலங்கையின் நீதித்துறை, இதுதான் புதிய ஆட்சியின் ஜனநாயக முகம்.

ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடையத்தில் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத அரசு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியோர் மீண்டும் நாடுதிரும்பலாம் என்று கூறுவது வேடிக்கையானது. நாடு திரும்புபவர்கள் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படலாம் அந்த வழக்குகள் முடிவின்றி ஆண்டுக்கணக்காய் தொடரலாம், சிறையில் அவர்கள் மனநோயாளிகளாயும், மனச்சிதைவடைந்தவர்களாயும் மாற்றமடைந்து ஏதோ ஓர் நாளில் மரணித்தும் போகலாம் அது இயற்கை மரணம் என்றோ, தற்கொலையென்றோ கூறி இலங்கை நீதித்துறை அவற்றை மூடி மறைக்கலாம்.

7எனவே பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இலங்கையில் நடைமுறையில் இருக்கும்போது வெளிநாடுகளில் தஞ்சம் கோரியோர் நாடுதிரும்புவதானது தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்பானதாகும். இலங்கையில் நல்லாட்சி நடைபெறுகிறது எனவே நாடுதிரும்புங்கள் எனக்கூறும் இலங்கை அரசு நாடு திரும்பும் நீங்கள் ஒரு போதும் கைதுசெய்யபடமாட்டீர்கள் உங்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும்  நாம் பொறுப்பு என்று உத்தரவாதம் வழங்குமா? அப்படி வழங்கினாலும் அதை காப்பாற்றுமா?

-சந்திரிகா-

Print Friendly, PDF & Email