SHARE

12

 

 

 

 

 

 

 

தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரித்தானிய அரசே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக கையொப்ப மனு சமர்ப்பிக்கும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அண்மையில் தொடங்கி இருந்தது. இந்த கையொப்ப மனுவை கீழ்வரும் இணைய இணைப்பில் காணலாம்:

https://petition.parliament.uk/petitions/132876

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இணையத்தளம் ஊடாகத் தொடங்கப்பட்டிருக்கும் இவ் இணையக் கையொப்ப மனுவில் பிரித்தானியாவில் வசிப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே ஒப்பமிட முடியும். இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களும், மாற்று இன மக்களும் இதனில் கையெழுத்திட்டு, தமிழ் மக்களுக்கு நீதி தேடும் பணியில் பங்களிப்பு செய்யும்படி, பாதிக்கப்பட்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

3
திரு. அருளோசன் அருளானந்தம்

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் வாழும் மக்களிடம் வீடுவீடாக சென்று இந்த கையெப்ப மனுவின் முக்கியத்தை எடுத்துரைத்து கையொப்பங்களை பெற்றுவரும் மனித உரிமை செயற்பாட்டாளரான திரு. அருளோசன் அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில் “ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுக்கொலைக்கு காரணமான இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சிறிய முயற்சி தான் இது. ஆனாலும் இது பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும். எனவே இச் சிறிய முயற்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில் தான் இலங்கையில் இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு உதவிய காரணத்துக்காக பல தடவை கைது செய்யபட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அதனால் உயிருக்கு பாதுகாப்பு தேடி பிரித்தானியாவில் தஞ்சம் கோர நேரிட்டதாகவும் தெரிவித்தார். யுத்தம் நிறைவு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் தனது குடும்பத்தினர் அண்மையில் கூட இலங்கை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருப்பாதாகவும், இது தொடரும் இன அழிப்பிற்கான சான்றுகளாகும் எனவும் தெரிவித்தார். இதனால் இந்த இன அழிப்புக்குக்கு ஒரு முடிவு கட்ட மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

4
திரு. கலைவண்ணன் இளையதம்பி

இலங்கையில் இடம் பெறும் இனப்படுகொலையை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வுப் போராட்டங்களை லண்டனில் மேற்கொண்டு வரும் நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஒருவரானஇ திரு. கலைவண்ணன் இளையதம்பி அந்த கையெழுத்து மனுவின் முக்கித்துவம் பற்றி எடுத்துக் கூறினார். ஆவர் தெரிவித்தாவது “இம் மனுவில் பத்தாயிரம் (10000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் எழுத்து வடிவில் பதில் அனுப்பும்”.

அவர் மேலும் தெரிவிக்கையில்  “அதேநேரம் இம் மனுவில் ஒரு இலட்சம் (100இ000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும். எனவே இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சனையை பிரித்தானிய அரசு மறந்து விடாமல் இருக்க இவ்வாறான அழுத்தக்களை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

5
திரு. ஜனார்த்தனன் கிறிஸ்ணமூர்த்தி

அனைத்து மக்களும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்குபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இந்த கையொப்ப மனுவின் உள்ளடக்கத்தை தமிழாக்கம் செய்து வழங்கிவருகிறார், நாடுகடந்த அரசின் மற்றொரு முக்கிய செயற்பாட்டாளரான திரு. ஜனார்த்தனன் கிறிஸ்ணமூர்த்தி அவர்கள். அவர்கள் வழங்கிய சாராம்சம் வருமாறு:  “சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துக!

தமிழர்கள் மீது இனவழிப்பு போர்க்குற்றம் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் போன்ற குற்றங்களைப் புரிந்த சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கீழ்காணும் ஒப்பதாரர்களாகிய நாம் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதல்களின் இறுதிக் கட்டத்தில் 146,679 தமிழர்கள் கணக்கிட முடியாதவர்களாயினர் – ஒன்றில் சிறீலங்கா படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்படும் பட்சத்தில் அவை போர்க்குற்றங்களாகவும் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களாகவும் நிறுவப்படும் என்று கடந்த 2015 செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நீதிமன்றம் ஒன்றில் சுயாதீன நீதி விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் சிறீலங்கா அரசு இனவழிப்பில் ஈடுபட்டமை நிறுவப்படக்கூடும் என்று குறிப்பிட்டார். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே நாங்கள் பிரித்தானிய அரசு இதனை முன்னெடுத்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்”

6
திரு. குணசீலநாதன் பொன்னம்பலம்

இம் மனுவில் விரைந்து கையொப்பமிட்டு சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு ஆவன செய்யுமாறு அனைத்துப் பிரித்தானியாவாழ் தமிழர்களுக்கும் மாற்றின மக்களுக்கும் அறைகூவல் விடுத்தஇ பிரபல அரசியல் செயற்பாட்டாளரான திரு. குணசீலநாதன் பொன்னம்பலம் அவர்கள் இந்த மனுவில் இணைய மூலம் கையெழுத்து இடுவதற்கான இலவான படிமுறைகளை மக்களுக்கு விளக்கி உதவிவருகிறார்;.

கையொப்பமிடுவதற்கு இலகுவான 10 படிமுறைகள்:

  1. கீழ்காணும்இணைப்பைஅழுத்துங்கள்
    https://petition.parliament.uk/petitions/132876
  1. அதில்காணப்படும்‘Sign this petition’என்றவிசையைஅழுத்துங்கள்
  2. திரையில்தோன்றும்படிவத்தில்‘I am a British Citizen or UK resident’என்றவாசகத்திற்குஅருகில்உள்ளபெட்டியில்புள்ளடியிடுங்கள்.
  3. பின்னர்‘Name’என்றபகுதிக்குள்உங்கள்முழுப்பெயரைத்தட்டச்சுசெய்யுங்கள்.
  4. தொடர்ந்து‘Email address’என்றபகுதிக்குள்உங்கள்மின்னஞ்சல்முகவரியைத்தட்டச்சுசெய்யுங்கள்.
  5. இனி‘Postcode’என்றபகுதிக்குள்உங்கள்வீட்டுக்கானதபால்குறியீட்டுஎண்ணைமுழுமையாகத்தட்டச்சுசெய்யுங்கள்.
  6. இப்பொழுது‘Continue’என்றவிசையைஅழுத்துங்கள்.
  7. உங்கள்மின்னஞ்சல்முகவரிக்குபிரித்தானியநாடாளுமன்றத்தில்இருந்துமின்மடல்ஒன்றுஅனுப்பிவைக்கப்படும்.
  8. அம்மின்மடல்கிடைத்ததும்அதனைத்திறந்துஅதில்காணப்படும்இணைப்பைஅழுத்துங்கள்.
  9. இப்பொழுதுஉங்கள்இணையக்கையொப்பம்ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சார்பில் இந்த முயற்சியை வரவேற்று கையெழுத்துக்களை தொடர்ந்து பெற்று வரும் செயற்பாட்டாளரான திரு கார்த்தீபன் யோகமனோகரன் இவ் இணைப்பை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்து அவர்களையும் இணைய மனுவில் ஒப்பமிட வையுங்கள் எனவும்; கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களின் விடிவுக்காக என்ற பெயரில் உருவாகிய பல புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், தற்போது பொது நோக்கை விடுத்து சுயநல le prix du cialis en pharmacie en france நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசிடம் விலைபோயுள்ள இந்த காலகட்டத்தில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த முயற்சியை தொடர்ந்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகிய இரு அமைப்புக்கள் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்கள் உணர்வுகளுக்கு இடமளிக்காமல் மற்றய அமைப்புக்களால் எடுக்கப்படும் இவ்வாறான நல் முயற்சிகளை முறியடிக்கும் சதிவேலைகளிலும் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது. எமது தேசிய சின்னங்களையும், விடுதலைப்போராட்டத்தையும் முன்னாள் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் இவர்களின் துரோகத்தனத்தை வெளிப்படுத்தி எமது இலக்கு சுதந்திர தமிழீழமே என உறுதியுடன் செயற்பட்டுவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஆகிய அமைப்புக்களின் கீழ் அணி திரள்வோம் எனவும் அவர் மக்களை வேண்டிக் கொண்டார்.

7

https://petition.parliament.uk/petitions/132876

Print Friendly, PDF & Email