SHARE

 

– மாவீரர் நாளில் உறுதியெடுத்த முன்னாள் போராளிகள் –

1 2

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை 27 நவம்பர் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் நினைவு கூருவது வழமை. அது போலவேரூபவ் லண்டனின் வரலாற்று முக்கியத்தும் பெற்ற ஒக்ஸ்போட் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இந்த வருடத்துக்கான மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்த தினத்தில் ஒன்று கூடிய புலம் பெயர்ந்த முன்னாள் போராளிகளும் மாவீரர் குடும்பத்தினரும் மாவீரர்களின் இலட்சியத்தின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம் என் உறுதியெடுத்துக் கொண்டனர்.

திருமதி. சதாநந்தன் ஜதுனா
திருமதி. சதாநந்தன் ஜதுனா

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்-கேணல் அன்புமணி என்ற மாவீரனின் சகோதரி திருமதி. சதாநந்தன் ஜதுனா (திருநெல்வேலி யாழ்ப்பாணம்) கருத்து தெரிவிக்கையில் ‘சிங்கள இனவெறி அரசால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இனமொழி ரீதியாகவும், மத ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அனைத்து வழிகளாலும் தமிழன் அடக்கப்பட்டான். சிங்கள அரசால் திட்டமிட்டு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான ஒடுக்குமுறையின் விளைவாகவே தமிழர் போராட்டம் எழுச்சிபெற்றது. விடுதலைப்புலிகள் மக்களின் பாதுகாவலர்களாக  உருவாக்க நிர்ப்பந்திக்கபட்டனர்.   இவ்வாறு தமிழ் இனத்தை காக்க அர்ப்பணிப்புக்களை புரிந்து, உரிமைகளை வென்றெடுக்க தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் தான் எம் மாவீரர்கள். இவர்கள் ஒரு உன்னத இலட்சியத்திற்காகவே வாழ்ந்து அதற்காகவே தங்கள் உயிர்களை  துறந்த இலட்சிய வீரர்கள். என்ன நோக்கத்திற்காக எனது ஒன்று விட்ட சகோதரன் வீரச்சாவடைந்தாரோ அந்த இலட்சியத்திற்கு இறுதி வரை அனைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும்’ என உணர்வுபூர்வமாக கூறினார்.

4
திரு கோகிலநாதன் முருகேசு

விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய திரு கோகிலநாதன் முருகேசு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகையில் ‘ஒவ்வொறு மாவீரர்களும் வார்த்தைகளால் கூறமுடியாத  தியாகங்களையும், நெஞ்சை உலுக்கும் நிகழ்ச்சிகளையும் வரலாறாய்  நிகழ்த்திக்காட்டியவர்கள். தமது இ;ன்னுயிரை தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும், தேசிய இறையாண்மையினை நிலைநிறுத்தவும், ஒடுக்குமுறைகளுக்கு  எதிராக போராடவும் காலத்தால் உருவாக்கிய மாபெரும் விடுதலைப் போராளிகள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் இலட்சியத்தை நோக்கி நாம் அரசியல் வழியில் போராட்டத்தை தொடர்வது மட்டுமன்றி ஈழ மண்ணில் கொடூர இன அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசையும் இராணுவத்தையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என்றார்.

 

 

]

5
திரு. பாலசிங்கம் குமரேசன் (தீபன்)

அதேபோல் கோவில்குஞ்சுகுளம் வவுனியாவை சேர்ந்த நாட்டுப்பற்றாளர் கதிரவேலு பாலசிங்கம் என்பவரின் மகனும் முன்னாள் போராளியுமான திரு. பாலசிங்கம் குமரேசன் (தீபன்) கூறுகையில், ‘காலத்திற்கு காலம் ஆட்சி பீடத்திற்கு வருகின்ற சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளாளேயே நாம் போராட நிர்பந்திக்கப்பட்டோம். அடக்குமுறைக்கு ஆளான மக்களின் பாதுகாப்பு கவசமாகவே விடுதலைப் புலிகள் உருவாகினார்கள். எமக்கான உயிர்த்தியாகம் செய்ய மாவீரர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பூசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கனவான தமிழீழ தாயகத்தை நாம் வென்றெடுக்க வேண்டும்’ என கூறினார். இவர் 2008 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்த இவர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிவடைந்தபின் அரச படையால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து தப்பி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு புலம்பெயர்ந்துள்ளார்;. இவர் இவரின் சகோதரி லதாஐpனியும் முன்னாள் போராளியாவார் இறுதிப் போரின் பின் தடுப்புமுகாம்களில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்து தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிக்கிறார். இவரின் தாயின் சகோதரர் செல்வராசா குமாரிநாடன் 1983ஆம் ஆண்டு அரசபடையினருக்கு எதிரான போரில் வீரச்சாவடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்)
திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்)

விடுதலைப் போரில் படுகாயமடைந்து பின்னர் இராணுவத்தின் பிடியில் பல சித்திரவதைகளை அனுபவித்து, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்திருக்கும் முன்னாள் போராளியான திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்) தெரிவிக்கையில் ‘மாவீரர்களின் கனவு நனவாகும் வரை அனைவரும் இறுதிவரை பாடுபட வேண்டும் எனவும் இறுதிப் போரில் நடந்த யுத்த குற்றங்களுக்கும், தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கிடைக்க அனைவரும் பாடுபட வேண்டும்’ எனவும் அறைகூவல் விடுத்தார்.

 

 

 

 

 

திரு. றூபேட் அன்ரனி அன்ரனி அலோசியஸ்

 ‘லெப்-சங்கர் தொடக்கம் மே 2009 ஆம் ஆண்டு வரை மண்மீட்பு போரில் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட என்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தம் இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்றனர். இவர்களின் ஈகங்களின் பெயரில்தான் இன்றுவரை தமிழினம் தனக்கென ஒரு அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டு தரணியில் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இன்று புலம்பெயர் தேசத்தில் பல லட்சம் தமிழர்கள் பரந்துவாழ்கின்றனர். பல்லாயிரம் மாவீரர்போராளிகளின் உறவுகளும், உடன்பிறப்புக்களும், தாய் தந்தையரும் தம் சொந்த தேசமிழந்து அகதிகளாய் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரியிருக்கின்றனர். மண்ணுக்காய் வீரச்சாவடைந்த  தம் உறவுகளை நினைவுகூற ஈழத்தில் அனுமதியில்லை சுதந்திரமாய் அழக்கூட வழியற்றவர்களாய் தமிழர்கள் தம் சொந்த தேசத்திலேயே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர் தொடர்ந்தும் மாவீரர் போராளி குடும்பத்தினர் மீது இலங்கை அரசு தன் அடக்குமுறைகளை பிரயோகித்தே வருகின்றது’ இவ்வாறு தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்; முன்னாள் போராளியுமான முல்லைததீவைச் சேர்ந்த  திரு. றூபேட் அன்ரனி அன்ரனி அலோசியஸ். இவரது தந்தையும் விடுதலைப்போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்து, 1995 இல் மாவீரர் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பெரும் சிரமத்தின் மத்தியில் இலங்கையில் இருந்து வெளியேறி லண்டனில்; தஞ்சம் கோரியிருக்கிறார்.

 

8
திரு கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன்

சீலன் என்று அழைக்கப்படும், கிழக்கு மாகாண முன்னாள் போராளியான திரு கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன் கருத்து தெரிவிக்கையில் ‘போரில் உறவுகளை பறிகொடுத்தும் தன் உயிருக்கு அஞ்சி புலம்பெயர்ந்து பிற நாடுகளில் அகதிக்கோரிக்கையினை சமர்ப்பித்து காத்திருக்கும் எமது வாழ்வு கேள்விகுறியானதே. ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் இருந்து அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு  திருப்பியனுப்பப்படும் உறவுகள் கேள்வியற்று கைது செய்யப்படுகின்றனர். காலவரையறையற்று தடுத்து வைக்கப்படுகின்றனர். பலர் சிறைச்சாலைகளுக்குள்ளேயே விடுதலையை எதிர்பார்த்தே  இறந்து விடுகின்றனர். விடுதலைப்போராட்டங்களின் நியாயத்தனமைகளை உணர்ந்துகொண்டு சர்வதேச சமூகம் எமக்காய் குரல்கொடுக்கவேண்டும் அதற்காய் தமிழர்கள் நாம் ஒன்றித்து எம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.

‘எம் தேசத்தின் காவல்தெய்வங்களை நினைவுகூறும் இந்நாளில் சர்வதேச மட்டத்தில் எம் ஒற்றுமையினை நிலைநாட்டி எம் நீதிக்காய் மாவீரர்களின் இலட்சியத்தின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்’ என்றும் இப்படியான முன்னாள் போராளிகளும் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்த புனித நாளில் உறுதியெடுத்துக்கொண்டனர்.

– சந்திரிக்கா –

Print Friendly, PDF & Email