Home சிறப்புச் செய்திகள் பிரித்தானியா பிரதமருக்கு புலம்பெயர் இளைஞர்கள் அவரச மனு கையளிப்பு

பிரித்தானியா பிரதமருக்கு புலம்பெயர் இளைஞர்கள் அவரச மனு கையளிப்பு

543 views
0
SHARE

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கும் அரசியல்கைதிகளுக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் விச ஊசி ஏற்றியமை தொடர்பாகவும்  மர்மமான சாவுபற்றியும் ஒரு நீதியான சர்வதேச விசாரணை உடனடியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் ,அரசமாற்றம் எவ்வித மாற்றத்தை தழிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பதையும் சிங்கள அரசாங்கமானது தொடர்ச்சியாக தழிழ் இன அழிப்பை நாடாத்திக்கொண்டுதான் இருக்கிறது அதை சர்வதேச சழூகம் பாரா முகமாக தொடர்ச்சியாக இருக்காமல் பிரித்தானியாவின் அதிகாரம் உள்ளவர்களில் ஒருவராகிய திரேசா மே ஆகிய நீங்கள் தழிழ் மக்களின் ஆறாத்துயரை புரித்தவராக உங்கள் தொனியில் இந்த சர்வதேசத்திற்கு ஒர் அழைப்பை விடுங்கள் என கூறி லக்சன் தர்மலிங்கம் மற்றும் தர்சிகா சிறிசிவக்குமார் அவரின் ஒழுங்கமைத்தலில் இம் மனு காலத்தின் அவசியம் கருதி இன்று அதாவது 15.03.2017 பகல் 1 மணியளவில் பிரதமர் வாசல்தளத்தில்  கையளிக்கப்பட்டது.

மேலும் குழுவின் பிரதிநிதிகளான  பிரசன்னா ரத்னவேல், பகீரதன் சிவஞானரட்னம்,  ஜனார்த்தனன் கிருஸ்ணமூர்த்தி, முத்துக்குமார் மாகாலிங்கம் பிரசாத், நகுலேஸ்வரன் சிவதீபன் மற்றும்  குகரூபன் கனேசலிங்கம்  ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்  இளைஞர்களாக நாங்கள் இன்று வித்தியாசமான முறையில் இந்த நாட்டின் பிரதமருக்கு கிட்டத்தட்ட 500 கையெழுத்துக்களுடன்  மர்மமான சாவு பற்றியும் குறிப்பாக 117 க்கு மேற்ப்பட்ட போராளிகள் திடீர் என நோய்வாய் பட்டு இறந்துள்ளார்கள் அதேவேளை உயிருடன் இருக்கும் மற்றையவர்கள் 10 கிலோ எடையுடைய ஒரு பொருளை நகர்த்தமுடியாத நிலையில் வாழ்வாதாரத்தை நாடாத்திச் செல்லும் கொடுமையை தினம் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதனை தெளிவுபடுத்தி இம் மனு கையளிக்கப்பட்டது, மேலும் புலம்பெயர் தழிழர்களாகிய நாங்கள் குறிப்பாக இளைஞர்கள் சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லவேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம் அந்த யதார்த்தம் புரிந்தவர்களாக தொடர்ச்சியாக செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்

புனர்வாழ்வு பெற்ற 117 போராளிகளின் மர்மமரணத்திற்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படாமல் நோயினால் மரணமடைவதாக சாதரணமாக மரண சான்றிதழ்கள் இலங்கை அரசால் வழங்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து இலங்கையில் பணிபுரியும் சிலவைத்தியர்களிடம் தொடர்பு கொண்டுகேட்டபோது’ சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷஊசிகளைப் பரீட்சித்துபார்ப்பதற்காக தடுப்பூசி என்ற போர்வையில் முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசு செலுத்தியுள்ளது’ என்ற அதிர்சிகரமான தகவலை தங்களது பெயர்களை வெளியிடவேண்டாம் என்ற உத்தரவாதத்துடன் தெரிவித்தனர்.

இத்துயரை சர்வதேச மனித உரிமை மன்றுக்கு எடுத்துச்செல்ல புலம் பெயர் தமிழ்மக்களின் பெயர் கூறிக்கொண்டு அவர்களது பணத்தில் சுகம் அனுபவிக்கும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும்; மற்றும் போராட்டதினை காரணமாக்கி இன்று நிறைவான வாழ்வுவாழும் அனைத்துத் தமிழர் தரப்பும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து இம்மனித உரிமை மீறலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இதனைஅனைத்து தமிழ் அமைப்புக்களும் முன்னின்று அனைத்து மக்கள் மத்தியிலும் எடுத்துச் சென்று தமிழ்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொண்டு வரவேண்டும். முக்கியமாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் பலத்துடன் உருவாக்கப்பட்டு இன்றும் இம்மக்களின் சந்தாநிதியுடன் சுகபோகமாக வாழ்ந்துவரும்பிரிஎப்(BTF) அமைப்பு போன்ற சில அமைப்புகள் இன்றுவரை இப்பிரச்சனை பற்றிய எதுவிதமான அறிக்கைகளோ பரப்புரைகளோவிடுக்காது இருப்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

ஆக நிலத்தில் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழும் எம் சழூகத்திற்கு  வாழ்வைதர புலம் தொனி உயர அணைவரும் அணிதிரளவேண்டும்

அதேவேளை கவனயீர்ப்புபோராட்டம் தொடர்ச்சியாக  பிரதமர் வாசல்தளத்திற்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

 

 

Print Friendly