SHARE

பிரித்தானிய  அரசாங்கம் அகதித்தஞ்சம்; தொடர்பான சட்;டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறுவகையான மாற்றங்களை அமுல்;படுத்தி வருகின்றது.

அதற்கமைய அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அகதித்தஞ்சம் தொடர்பில்  புலம்பெயர் தமிழ் அரசியல் மற்றும் மனிதஉரிமை அமைப்புக்கள் வழங்கக்கூடிய பங்களிப்புகள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக தமிழ் தகவல் நடுவம் (வுஐஊ); ஒரு சிறப்புக் கருத்தரங்கை ஏற்பாடுசெய்துள்ளது.

இக்கலந்துரையாடலில் பிரித்தானியாவில் அகதித்தஞ்சம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீண்டகால அனுபவம்மிக்க சட்டநிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்கள். அவர்களின் விபரங்கள் வருமாறு.

1. Manjit S Gill, QC
(Head of the International Human Rights Law Group at No5 Chambers)

Manjit S Gill, QC (Head of the International Human Rights Law Group at No5 Chambers)

2. Joanne Rothwell
(Senior Barrister & Head of the Immigration, Asylum and Nationality Group at No5 Chambers)

Joanne Rothwell (Senior Barrister & Head of the Immigration, Asylum and Nationality Group at No5 Chambers)

3. Arun Gananathan
(Barrister, Birmberg, Peirce & Partners)

Arun Gananathan (Barrister, Birmberg, Peirce & Partners)

4. Kulasegaram Geetharthanan
(Human Rights Lawyer)

இலவசமாக நடுத்தப்படுகின்ற இக்கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். மேலும் கருத்தரங்கின் முடிவில் கேள்வி பதில்நேரத்தில் தங்களது சந்தேகங்களை சட்டநிபுணர்களுடன் கலைந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கருத்தரங்கானது வருங்கின்ற சனிக்கிழமை 18/03/2017 மாலை 04:00-07:00pm
The Auditorium
University of Westminster (Harrow Campus),
Middlesex
HA1 3TP
என்ற முகவரியில் நடைபெறஇருக்கிறது.
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் முற்பதிவு செய்வதன்மூலம் உங்களது ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரங்களிற்கு:
Tamil Information Centre: 02085461560/ 07832909139
சிவகாந்தன்:   07405921896
ஜெயபாலன்:  07766832754
விமலாகரன்:  07947928644
தேவா:          07760570892

 

Print Friendly, PDF & Email