SHARE

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் பாரிய விளையாட்டு நிகழ்வு ஒன்றை கடந்த 30ம் ஐPலை 2017 அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் பெருமளவான விளையாட்டு வீரர்கள் பொது மக்களும் பங்குபற்றினர். புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் அமைப்புக்கள் இப்படியான நிகழ்வுகளை நடாத்திவருகின்ற போதிலும், இந்த விளையாட்டு நிகழ்வானது மிகவும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது மட்டுமன்றி, மக்களின் பலத்த வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிகழ்வானது, தியாக தீபம் லெப். கேணல் திலீபன் என்ற மாவீரனின் நினைவாக நடாத்தப்பட்டது மட்டுமன்றி, தேசிய கொடியேற்றல், மாவீர வணக்கம், மற்றும் மாவீரர் படம் தாங்கிய அணிவகுப்பு என முழுமையான தேசிய விடுதலை உணர்வுடன் நடாத்தப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாவீரர்கள் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றை வழங்குவதற்காக, அந்தந்த மாவீரர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த சிறப்பு அம்சமானது எமது தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வை ஊக்குவிப்பதாக அமைந்தது.

இந்த அடிப்படையில், நாட்டுப்பற்றாளர் திரு. கதிரவேலு பாலசிங்கம் அவர்களின் நினைவாக, அவரது மகனான திரு. பாலசிங்கம் குமரேசன் அவர்கள் அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்ட்டார். அவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியும் நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னணி செயல்பாட்டாளரும் ஆவார். அவர் தனது தந்தையின் நினைவுக் கோப்பையை விளையாட்டு வீரருக்கு வழங்கி வைத்தார்.

திரு கதிரவேலு பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். இராணுவ ஆக்கிரமிப்பு காலப்பகுதியிலும் மிகுந் சிரமத்தின் மத்தியில் விடுதலைக்காக உழைத்தவர். இறுதிப் போர் நடைபெற்ற காலத்திலும் அயராது பின்தளப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவ தாக்குதலில் கொல்லபட்டார். ஆதனால் இவர் தேசியத் தலைவர் அவர்களால் ‘நாட்டுப்பற்றாளர்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

செஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த மேஐர் வஞ்சி அவர்களது நினைவாக, அவரது சகோதரனும் முன்னாள் போராளியுமான, திரு நித்தியானந்தராசா கந்தப்பு அழைக்கபட்டு கௌரவிக்கப்பட்டார். nஐயசிக்குறு சமரின் போது கரப்புக்குத்தி விஞ்ஞானக்குளம் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட வலிந்த தாக்குதலில் மேஐர் வஞ்சி முன்னின்று தாக்குதலை நடாத்தி வீரச்சாவடைந்தார்.

பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கதிரவன் அவர்களது நினைவாக, அவரது சகோதரனான திரு அசாந்தன் தியாகராஐh அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இவரும் முன்னாள் போராளி மட்டுமன்றி தொடர்ந்தும் நாடுகடந்த அரசுடன் இணைந்து தொடர்ந்தும் தமிழீழ விடுதலைக்கு போராடிவரும் ஒருவர். லெப்டினன்ட் கதிரவன் பாலமோட்டை பகுதியை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடனான நேரடி சமரின்; போது 04 ஆகஸ்ட் 2007 அன்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். அவர் நினைவாக வெற்றிக்கேடயத்தை திரு அசாந்தன் தியாகராஐh வழங்கினார்.

அரசியல்துறை தாக்குதல் படையணியின் சிறப்பு தளபதியான லெப்டினன் கேணல் ஈழப்பிரியன் அவர்களின் நினைவாக அவரது உறவினரான, திரு திவாகர் சிறீபாஸ்கரன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். லெப்டினன் கேணல் ஈழப்பிரியன் தலை சிறந்த தாக்குதல் தளபதிகளில் ஒருவர். அவர் தளபதியாக இருந்த காலப்பகுதியில் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னின்று நடாத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேஐர் மிகுதன் நினைவு வெற்றிக் கேடயத்தை அவரது உறவினரான திரு. யூட் தேவதர்சன் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேஐர் மிகுதன் அரசியல்துறை பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்செல்வனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்தவர் 02 நவம்பர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான தாக்குதலில் வீரச்சாவடைந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் மண்டைதீவு பகுதியில் நடைபெற்ற தாக்குதலின் போது வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் இன்பம் அவர்களின் நினைவான வெற்றி கோப்பையை அவரின் பெறாமகன் திரு கஐந்தன் nஐகதீசனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. லெப்டினன்ட் கேணல் இன்பம் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மெய் பாதுகாவலராக கடமையாற்றியவராவார்.

nஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த கப்டன் பழனியப்பன் அவர்களது நினைவு கேடயத்தை அவரது மைத்துனன் திரு குமரன் சிவதாஸ் வழங்கி கௌரவித்தார். வன்னி பகுதியை கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட nஐயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலின் போது கப்டன் பழனியப்பன் 30 ஜனவறி 1997 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்தார்.

nஐயசிக்குறு படை நடவடிக்கையின் போது தாண்டிக்குளம் பகுதியை ஊடறுத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலின் போது 26 மார்ச் 1997 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த கப்டன் பரணிதா நினைவாக வெற்றிக் கேடயத்தை அவரது சகோதரனான திரு மதுசன் இராசலிங்கம் வழங்கி கௌரவித்தார். இவரும் நாடுகடந்த அரசின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக தமிழீழ விடுதலைப்பு போராடிவரும் ஒருவர். கப்டன் பரணிதா 2ஆம் லெப்டினன்ட் மாலதி படையணியின் இளநிலை படைத் தளபதிகளில் ஒருவராவார்.

பலாலி விமான தளம் மீதான விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்கு வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு 25 மே 2000 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கைக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வீரச்சாவடைந்த மேஐர் ஈழமணி நினைவாக வெற்றிக் கேடயத்தை அவரது உறவினரான திரு நவரட்ணராஐh ரட்ணராஐh வழங்கி கௌரவித்தார்.

nஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த கப்டன் புயல்வாணன் அவர்களது நினைவு கேடயத்தை அவரது மைத்துனன் திரு யேந்திரன் மகேந்திரன் வழங்கி கௌரவித்தார். வன்னி பகுதியை கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட nஐயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலின் போது மாங்குளம் பகுதியில் கப்டன் பழனியப்பன் 10 நவம்பர் 1998 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்தார்.
இது நிகழ்வு ஒரு விளையாட்டு விழாவாக மட்டும் நின்றுவிடாமல், எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் உறவுகளை கௌரவித்து, அதன்மூலம் பிளவுபட்டுக்கிடக்கும் புலம்பெயர் தமிழ்மக்களை ஒன்றிணைத்து, எம் மாவீர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடு;த்தும் செல்லும் முயற்சியாகவும் இருந்தமை மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இதை ஏனைய புலம்பெயர் அமைப்புக்களும் தொடர வேண்டும் என்பதே தழிம் மக்களின் பேரவாவாகும்.

-சந்திரிகா-

Print Friendly, PDF & Email