SHARE

வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர் கவனம் எடுத்து வருகின்றது.

இந்நிலையில் மேற்படி மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வடமாகாணத்தில் காணாமல் போனோர் பற்றி 62 முறைப்பாடுகள் பதியப்படுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

2015 ஆம் ஆண்டு 22 முறைப்பாடுகளை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா 20 முறைப்பாடுகளும் பதியப்படுள்ளன.

அதேவேளை, மனித உரிமை மீறல்கள் குறித்து வடக்கு மாகாணத்தில் கடந்த 3 வருடங்களில் 1944 முறைப்பாடுகள் உரிய முறையில் பதிவு செயப்பட்டு மனித உரிமை ஆணைக்குழுவினால் ஏற்றுகொள்ளப்டுள்ளது.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 93 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 284 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு யாழ். பிராந்திய அலுவலகத்தில் 219 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 129 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 315 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2017 செப்டெம்பர் மாதம் வரை யாழ். பிராந்திய அலுவலகத்தில் 188 முறைப்பாடுகளும் கிளிநொச்சி உப அலுவலகத்தில் 73 முறைப்பாடுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் 256 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email