SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இம்முறை சிங்கள மொழியிலும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை- இந்திய யாத்திரிகள் ஒன்றுகூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் இம்முறை இலங்கையிலிருந்து 8,000 பேரும் இந்தியாவிலிருந்து 5,000 பேரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, இம்முறை முதன் முறையாக சிங்கள மொழியிலும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க சிங்கள மொழியிலான ஆராதனைகளை நடத்தவுள்ளார்.

கச்சதீவு திருவிழாவில் சிங்கள மொழி பேசும் மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் அரதானைகள் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email