SHARE

-தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து ஐ.நா. அதிரடி முடிவு

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது.

அமைதிகாக்கும் பணிக்காக லெபனான் செல்லவிருந்த நிலையில் போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இராணுவ அதிகாரியின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.விசாரணைகள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கின், அவர் குறித்த மீளாய்வுகள் முடியும் வரை லெபனானுக்கு அனுப்பப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் முழுமையான மீளாய்வின் பின்னரே அவரை அங்கு நிறுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இராணுவ அதிகாரியின் பின்னணி தொடர்பாக நாம் இலங்கையின் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுளோம். அவர்கள் எமது  விசரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.

மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளை ஐ.நா. தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இராணு அதிகாரி ரத்னபுலி வசந்தகுமாரவுக்கு எதிராக ஐ.நா.வின் அமைதிகாக்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டு கடிதங்களில் பெரும்பாலானவை, அவர் 2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு தாக்குதலில் பிரதான வீரராகவும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான 57 பிரிவின் கீழ் செயல்பட்ட 4 ​​படைப்பிரிவின் செயல்பாட்டு தளபதியாக கிளிநொச்சியில் இரத்தம் தோய்ந்த இராணுவத் தாக்குதலில் அவர் தீவிரமாக பங்குபற்றியவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email