SHARE

பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியான லியூசியம் வாழ் தமிழ் இளைஞன் சுப்பிரமணியம் சுரேஸின் முறைப்பாட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அளித்துள்ள பதிலினிலேயே இதனை அவர் குறிப்பிடுள்ளார்.

அதேவேளை குறிப்பிட்ட வீடியோ காட்சி தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் இலங்கை உயர்ஸ்தானிகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது உயர்ஸ்தானிக பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ தமிழர்களைப்பார்த்து கொலைமிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து இராணுவ அதிகாரியால் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகள் செய்ததுடன் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் குறித்த விடயம் தொடர்பில நடவடிக்கை எடுக்குமாறு கேரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Print Friendly, PDF & Email